Posts

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - அணினி உள்ளூர்

Image
        சில நாட்களுக்கு முன் என்னுடைய ஆபீஸ் சீனியர் ஒருவர் என்னுடைய பயணத்தைப் பற்றி விசாரித்தார். அவரது எண்ணம் இப்படி என்னைப்போல் பயணிப்பதற்கு   பணம் செலவழிப்பது சரியல்ல என்பது. பலரது எண்ணமும் அதுதான். நான் என்னுடைய பட்ஜெட்-க்குள் மட்டுமே எண்ணி எண்ணி செலவழிக்கிறேன் என்றாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.            அவரிடம் பேசியபின்தான் உண்மையில் நான் கொஞ்சம் பணத்தை புதிய அனுபவமாகவும் , மகிழ்ச்சி நிறைந்த   நினைவுகளாகவும் பரிமாற்றி வைத்துக் கொள்கிறேன் என்று எனக்கே புரிந்தது.            மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்ட பின்,  நடந்தே சென்றோம் , மொத்த அணினி நகரத்தையும் மேலே இருந்து பார்க்க. என்ன மொத்த நகரம் ( மக்கட் தொகை 2000 பேர்! 6 தெருக்கள், மிஞ்சிப்போனால் 500 வீடுகள்!! ).            இன்று எங்கள் டிரைவர் ஆஷிக்கிற்கு கொஞ்சம் ஓய்வு. எங்களுடன் அணினியில் chalohoppo -வின் உள்ளூர் பிரதிநிதியாக அமிஷியும் சேர்ந்துகொண்டாள். நாங்கள் அணினியிலிருந்...

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை

Image
     நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி இமய மலைக்கு செல்லும் பழக்கமுடையவர் . முன்பெல்லாம் இவர் ஒரு ஸ்டண்ட் -க்குக்காக செய்கிறார்  என்றே நினைத்திருந்தேன். ஆனால், முதல் முறை இமயத்தைப் பார்த்தபின்,  என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இன்று வரை இமயம் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.  அப்பெரிய இயற்கையின் முன் ஆணவம் அழிந்து நான் சிறு துளியாய் உணர்கிறேன்.       இந்த முறை இப்பயணம் பெரிதும் திட்டமிடப் படாதது.  அலுவலகத்தில் இரண்டு ப்ராஜெக்ட்-களுக்கு இடையில் ஒரு சிறு இடைவெளி கிடைத்தது. மேலும், விடுமுறையும் இருக்கிறது என்பதால் ஒரு தனிப் பயணம். தேதிகள் சரியாகப் பொருந்தியதால்தான் நான் இந்த இடத்தை தேர்வு செய்தேன்.  அது தவிர உண்மையிலேயே அணினி பற்றி இந்த பயணத்தின் போதுதான் தெரிந்துகொண்டேன்.           அருணாச்சலில் மூன்று மலை நகரங்கள் முக்கியமானவை . ஒன்று எல்லோருக்கும் தெரிந்த தவாங் (Tawang). இதுதான் சீனாவுடன் பிரச்சனையில் இருக்கும் பகுதி. இது வடமேற்கு அருணாச்சலில் உள்ளது. அடுத்து வடக்கு  மத்தியில் உள்ள மேச்சுக்கா (Mech...

வியட்நாம் பயணம் - மீண்டும் Ha Noi - நிறைவுப் பகுதி

Image
Ha Noi - இல் மீண்டும் அதே Homestay.          சென்னையில் இருந்து கிளம்பி இன்று ஒன்பதாம் நாள்.  வியட்நாமின் வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சமேனும் பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்றுதான் Hoa Lo சிறையின் மியூசியம் சென்றோம்.                பிரெஞ்சு காலனி காலகட்டத்தில் கட்டப்பட்டது இந்த சிறை.  விடுதலைக்காகப் போராடியவர்களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு அடைக்கப்பட்ட இடம். ஆண் கைதிகள் எந்நேரமும் கால்களை நீட்டி பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். சிறிய சிறைதான் இது,  சில நேரங்களில் மிக அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.            1908 இல் நிகழ்ந்த Hanoi Poison Plot - என்பது விடுதலைப் போராட்டக்குழுவின் ஒரு முக்கியமான ஒரு சதித் திட்டம். சமையல்காரர்கள் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு சிப்பாய்களின் உணவில் விஷம் கலந்து கொன்று ஒரு கோட்டையைக் கைப்பற்றும் முயற்சி. இரண்டு வகையில் அது தோல்வியில் முடிந்தது. ஒன்று, கலக்கப்பட்ட விஷம் சிப்பாய்களைக் கொல்லவில்லை...

வியட்நாம் பயணம் - Da Nang

Image
                      அன்று இரவு எட்டு மணிக்கு Da Nang  நகருக்கு எங்கள் விமானம். விமான நேரத்திலோ, விமான நிலைய நடைமுறைகளிலோ எந்த பிரச்சினையும் இல்லை.                       மூன்று நாட்கள் தங்குவதற்காக Da Nang - இலும் ஒரு HomeStay தான் பதிவு செய்திருந்தோம், HomeStay  Halley என்று பெயர். பல முறை booking.com  வழியாக தகவல் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை, கொடுக்கப்பட்டிருந்த மொபைல் எண்  Whatsapp -இலும் இல்லை.  நேரடியாக பேசினாலோ அந்த பக்கத்தில் இருந்து பேசும் பெண்மணிக்கு ஆங்கிலம் தெரியவில்லை.                  ஆனால் அவர் சொல்லி அவருடைய 9ஆம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் பேசினான், அவனுக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்து இருந்தது. வீடு விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தான்.அதனால் நம்மையே  டாக்ஸி பிடித்து வரச் சொல்லி விட்டான். ஆனால்  இரண்டாம் முறையே  I can't unde...