பயணங்கள் தொடர்கின்றன - 6 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 3 - நாக்கோ (Nako) முதல் காசா (Kaza) வரை
நான்காம் நாள் காலை வேனில் கிளம்பும் முன் எங்களை நாக்கோ கிராமத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வரச்சொல்லி விட்டார்கள். அதனால் அதிகாலை 6 மணிக்கே கிளம்பி ஒரு ட்ரெக்கிங், மலை மீது 40 நிமிடம் ஏறினால் ஒரு சிறிய கோவில். அங்கிருந்து பார்க்கும்போது தெரியும் நாக்கோ கிராமம் வேறொரு வகையில் அழகு! நாக்கோவின் புத்த மடாலயம், நாங்கள் செல்லும்போது திறக்கவில்லை. 7 மணிக்கே souvenir கடை ஒன்றைத் திறந்து வைத்து ஒரு பாட்டியம்மாள் எல்லோரையும் அழைத்துக்கொண்டிருந்தது. மூன்று ஜோடி தொங்கட்டான்களை மொத்தம் 750 ரூபாய் கொடுத்து வாங்கினேன். (வீட்டில் கேட்டால் ஜோடி 60 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார்கள்). ஆனால் இவ்வளவு உயரத்தில், ஆண்டில் 5 மாதம் மட்டும் சுற்றுலாவை நம்பி இருக்கும் கள்ளமற்ற மனிதர்கள் வாழும் இந்த ஊரில் விலை ஒன்றும் அதிகம் இல்லை என்றுதான் சொல்வேன். இன்றைய திட்டம், நாக்கோவில் இருந்து க்யூ (Gue) , அங்கிருந்து தாபோ (Tabo ), தங்கர் (Dhankar) வழியாக காசா (Kaza) சென்றடைய வேண்டும். இங்கு ஒன்று சொல்லவேண்டும்.... பல தார திருமணத் தடை சட்டம் அண்ணல் அம்பேத்காரால் 1951-இல் பரிந்து...