Posts

Showing posts with the label Karnataka

உடுப்பி பயணம்-2

Image
  பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் அதிகாலை நடையை நான் தவற விடுவதில்லை. எப்படிப்பட்ட சாதாரண ஊரானாலும் அதிகாலையில் அது அழகாகத்தான் தோன்றும் என்பது என் கருத்து.  சுற்றுலா என்று வந்து விட்டு  இரவெல்லாம் குடித்துவிட்டு அதிகாலையில் உறங்குபவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் மிக மிகப்  புத்துணர்வான அதிகாலை அனுபவத்தை இழக்கிறார்கள். நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உணவு செய்து கொடுக்கும் வசதியெல்லாம் இல்லை. அதிகாலை நடையுடன் தெருவோர டீக்கடையில்  ஒரு காப்பியும் குடிக்கலாம் என்று நினைத்து நடந்தேன். உடுப்பியில் நான் அப்படி ஒரு டீக்கடையைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மிக அரிதாகத்தான் இருக்கும். உடுப்பி ஊரின் நிலஅமைப்பு கேரளா போலத்தான். அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகள் எல்லாமே தேக்கு,பலா,மா உள்ளிட்ட மரக்கூட்டங்களுக்கு உள்ளே இருக்கின்றன. ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீடுகள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன்.ம்ஹூம் அப்படி எதுவும் தென்படவில்லை. காலை 8 மணிக்கெல்லாம் கார் வந்து விட்டது.  இன்று உடுப்பி உள்ளூர் கடற்கரைகள்தான்...

உடுப்பி பயணம் - 1

Image
நான் 2022 இல் ஸ்பிட்டி சமவெளி போனபோதுதான் நீண்ட விடுமுறை எடுத்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும் இந்தியர்களைப் பார்த்தேன். ஐரோப்பாவில் அது சாதாரணம். மத்திய அரசுப்பணியில் இருக்கும் என் நண்பர் ஆண்டுக்கு மூன்று முறை நீண்ட பயணங்களை மேற்கொள்பவர். அவர் விடுமுறைகளைச் சேமித்து வைப்பதில்லை.வாய்ப்பு கிடைத்தால் வார விடுமுறைகளில் கூட மலையேற்றம் சென்று விடுவார்.  இன்னொருவர் Freelance சாப்ட்வேர் எழுதுபவர். 3 மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறார்.  இது போன்றவர்களை விட மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றுபவர்கள் இன்னும் பயணப் பைத்தியங்கள்.  இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சில பொதுவான பண்புகளைப் பார்த்தேன். அனைவருமே  மிக மிக நேர்த்தியாகத் திட்டமிடுவார்கள், கண்டதையும் சாப்பிட மாட்டார்கள். எதையும் யோசித்துச் செலவு செய்வார்கள். ஆரோக்கியமாக இருப்பார்கள்.  இவர்களுக்கெல்லாம் என்ன கிடைக்கிறது, ஏன் இப்படி ஊர் சுற்றுகிறார்கள் என மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கும்.  எனக்கெல்லாம் ஒரு புதிய ஊரில் நம்மை யாருக்கும் தெரியாது, நமக்கும் யாரையும் தெரியாது. நம்மை யாரும் கவனி...