Posts

Showing posts with the label Ha Noi

வியட்நாம் பயணம் - மீண்டும் Ha Noi - நிறைவுப் பகுதி

Image
Ha Noi - இல் மீண்டும் அதே Homestay.          சென்னையில் இருந்து கிளம்பி இன்று ஒன்பதாம் நாள்.  வியட்நாமின் வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சமேனும் பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்றுதான் Hoa Lo சிறையின் மியூசியம் சென்றோம்.                பிரெஞ்சு காலனி காலகட்டத்தில் கட்டப்பட்டது இந்த சிறை.  விடுதலைக்காகப் போராடியவர்களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு அடைக்கப்பட்ட இடம். ஆண் கைதிகள் எந்நேரமும் கால்களை நீட்டி பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். சிறிய சிறைதான் இது,  சில நேரங்களில் மிக அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.            1908 இல் நிகழ்ந்த Hanoi Poison Plot - என்பது விடுதலைப் போராட்டக்குழுவின் ஒரு முக்கியமான ஒரு சதித் திட்டம். சமையல்காரர்கள் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு சிப்பாய்களின் உணவில் விஷம் கலந்து கொன்று ஒரு கோட்டையைக் கைப்பற்றும் முயற்சி. இரண்டு வகையில் அது தோல்வியில் முடிந்தது. ஒன்று, கலக்கப்பட்ட விஷம் சிப்பாய்களைக் கொல்லவில்லை...

வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

Image
            ஒரு வெளி நாட்டு பயணம் போகலாம் ஆனால் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று தயங்குகிறீர்களா, அப்படியானால் நீங்கள் வியட்நாம் போகலாம், அங்கு தமிழிலேயே பேசலாம். ஏனென்றால் ஆங்கிலமோ, தமிழோ நீங்கள் எது பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. பெரும்பாலான உரையாடல்கள் சைகை மொழியிலும்,google Translator செயலியின் உதவியுடன்தான்.              இந்த முறை வியட்நாம் போகலாம் என்று முடிவு செய்ததற்கு எந்த சிறப்பு காரணங்களும் இல்லை,  கொஞ்சம் குறைத்த பட்ஜெட்டில் அழகான இடங்கள் பார்க்கலாம் என்பது தவிர. சென்ற இரண்டு முறையும் இமய மலையைத் தொட்டுவிட்டு வந்ததால் இம்முறை மருதமும், நெய்தலும்! இந்த பயணமும் நாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டதுதான். பயண முகவர்களிடம் செல்லவில்லை.                வியட்னாம் நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு.  உலக வரைபடத்தில் சென்னையில் இருந்து நேர் கிழக்காக ஒரு கோடு கிழித்தால் தெற்கு வியட்நாமின்  ஹோ சி மின் சிட்டி (Ho Chi Min City) என்றால்,கல்கத்தாவில் இருந்து அதே போ...