Posts

Showing posts with the label Hikkim

பயணங்கள் தொடர்கின்றன - 7 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 4 - காசா (Kaza) - ஹிக்கிம் (Hikkim), லாங்சா (Langza), காமிக்(Komic)

Image
ஐந்தாம் நாள் போகத் திட்டமிட்ட இடங்கள் எல்லாம் காசாவைச் சுற்றியுள்ள இடங்கள்தான். அதிக தூரம் போக வேண்டியதில்லை. கொஞ்சம் நிதானமாகக் கிளம்பலாம். காசா சற்றே பெரிய ஊர். எங்கள் பயணத்தில் கடைசி ATM இங்குதான் உள்ளது. அதிலும் பல நேரங்களில் பணம் தீர்ந்து போய்விடும் என்றார்கள். நாங்கள் பார்க்கும்போதே பணம் எடுப்பதற்குப் பல பேர் வரிசையில் நின்றார்கள். எங்கள் பயண முகவர் சொன்னபடி முதலிலேயே cash எடுத்துச் சென்றுவிட்டோம். காசாவில் மற்றொரு பிரச்சினை Power Failure. எப்போதாவதுதான் சப்ளை இருக்கிறது. அதற்குள் ஹீட்டர் போட்டு குளித்துக் கொள்ளவேண்டும். மொபைல் மற்றும்  பவர் பேங்க்- ஐச் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.  காஸாவில் இருந்து கிளம்பிய பின் இரண்டு நாட்கள் பவர் பேங்க் இல்லாமல் சமாளிக்க முடியாது. காசா வரை ஏர்டெல், ஜியோ இரண்டும் வேலை செய்கின்றன. வோடபோன் முதல் நாளில் இருந்தே வேலை செய்யவில்லை. எங்கள் பயண முகவர் சொன்னது போல நான் கூடுதலாக ஒரு BSNL சிம் வாங்கிக்கொண்டு சென்றேன்.அதன் Voice Network மட்டுமே வேலை செய்கிறது, Data - ம்ஹும் ...சுத்தம்! இன்று முதலில் ஹிக்கிம் - கிராமம். காஸாவில் இருந்து 1...