வியட்நாம் பயணம் - Da Nang
அன்று இரவு எட்டு மணிக்கு Da Nang நகருக்கு எங்கள் விமானம். விமான நேரத்திலோ, விமான நிலைய நடைமுறைகளிலோ எந்த பிரச்சினையும் இல்லை. மூன்று நாட்கள் தங்குவதற்காக Da Nang - இலும் ஒரு HomeStay தான் பதிவு செய்திருந்தோம், HomeStay Halley என்று பெயர். பல முறை booking.com வழியாக தகவல் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை, கொடுக்கப்பட்டிருந்த மொபைல் எண் Whatsapp -இலும் இல்லை. நேரடியாக பேசினாலோ அந்த பக்கத்தில் இருந்து பேசும் பெண்மணிக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் அவர் சொல்லி அவருடைய 9ஆம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் பேசினான், அவனுக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்து இருந்தது. வீடு விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தான்.அதனால் நம்மையே டாக்ஸி பிடித்து வரச் சொல்லி விட்டான். ஆனால் இரண்டாம் முறையே I can't unde...