Posts

Showing posts with the label Sri Nagar

காஷ்மீர்ப் பயணம்- 5 : பஹல்கம் (Pahalgam) - ஸ்ரீநகர் - குல்மார்க் (Gulmarg)

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர் காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam)           மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே யாசிர் வந்துவிட்டார்.   காலை உணவாக ஆலு பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, Oswal Cottage -இல் இருந்து கிளம்பினோம்.           இந்த இரண்டு நாட்களில் லிதர் ஆற்றில் தண்ணீர்ப் பெருக்கு அதிகரித்திருந்தது. மேலும் கீழே  செல்லச் செல்ல பல கிளை ஆறுகளும், அருவிகளும் சேர்ந்து  தண்ணீர் பெருகி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் Yenner என்ற இடத்தில் நிறுத்தி சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.            இன்று ஸ்ரீநகர் சென்று சில இடங்கள் பார்ப்பதாகத் திட்டம். ஆனால் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை பெய்தால் மொஹல் தோட்டங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு.                நான் ஹஸ்ரத்பால் தர்ஹாவுக்கு செல்லலாம் என்று சொன்னேன். அது 1990-களில் செய்தித்தாள்களில் அடிக...

காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்

Image
  காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்         காஷ்மீர் செல்வது  பாதுகாப்பானதுதானா  என்று நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.ஸ்ரீநகரில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் குறைந்தபட்சம் ஒரு CRPF - வீரர் கையில் யந்திரத் துப்பாக்கியுடன் நிற்கிறார். நான் பார்த்தவரை எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை.            சினிமாக்களும் ஊடகங்களும் சிறிய விஷயங்களையும் பெரிதுபடுத்துவார்கள். 1980-இன் இறுதிப்பகுதிகள் அல்லது 1990-களின் தொடக்கம் போல இப்போதெல்லாம் இல்லை (ரோஜா திரைப்படம் 1992-இல் வெளியானது).  2008 -ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 60% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.  2009 -இல் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக காஷ்மீர் இருந்திருக்கிறது.            காஷ்மீரில்  கணிசமான மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாவைச் சார்ந்தே  உள்ளது. கொரோனா இவர்களை அதிகமாகப் பாதித்திருக்கிறது.  அவர்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும்....

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

Image
குடும்பத்துடன் நீண்ட பயணம் செய்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. முதல் மூன்று ஆண்டுகள் கொரோனா முதலில் முடக்கிப் போட்டது என்றால், மகிழ்நனின் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கான ஆயத்தங்கள் என்று மீண்டும் ஒரு வருடம் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. ஒருவாறாக, மே இரண்டாம் வாரத்திற்குப் பிறகு பயணம் செல்லலாம் என்று திட்டமிடப் பட்டது. முதலில் தாய்லாந்து தான் செல்வதாகத் திட்டம். ஆனால் தாய்லாந்தில் மே மாதம் அடிக்கிற வெயிலும் சென்னைக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதால்  காஷ்மீர் என்று முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்தில் நால்வரும், உறவினரின் குடும்பம் மூன்று பேரும் என எங்கள் பயணத்தில் மொத்தம் 7 பேர். சென்ற ஆண்டு, நான் மட்டும் ஸ்பிட்டி சமவெளி சென்ற போது பணய ஏற்பாட்டாளர் வழியாக சென்றேன். ஆனால் இந்த முறை அனைத்து ஏற்பாடுகளும் நாங்களே செய்து கொண்டோம். இதில் சாதக பாதகங்கள் உண்டு.   பாதகம் என்றால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும். எந்த கால வரிசையில் எங்கெங்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்து, ஹோட்டல் முன் பதிவு செய்யவேண்டும், பயண வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வேண்டும். எங்கு என...