Posts

Showing posts with the label Personal Experience

பயணங்களில் மனிதர்கள்-1 !

Image
 எப்போது கேரளா சுற்றுலா சென்றாலும் ஒரு நல்ல மனிதரை (நல்ல மனிதரை எப்படித் தீர்மானிப்பது?) ... சரி...பணத்துக்கு ஆசைப்படாத ஒரு மனிதரைப் பார்த்து விடலாம். 2019 டிசம்பர் மாதத்தில் கண்ணூர் பயணம். ஆறு குடும்பங்களில் இருந்து மொத்தம் 20 பேர் சென்ற பயணம்.அந்தப் பயணம் பற்றி தனியாக எழுத வேண்டும். ஒருநாள் காலை "ஆராளம்" காட்டுக்குள் போய்விட்டு நீண்ட பயணத்துக்குப் பின்  பரசனிக்கடவு என்ற ஊரில் இருக்கும் முத்தப்பன் கோவில் சென்றோம். புகழ் பெற்ற "தெய்யம் விழா" இந்தக் கோவிலில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு. உத்தம வில்லன் படத்தில் கூட கமல் "தெய்யம்" ஆடுவார். முத்தப்பன் ஒரு புரட்சி தெய்வம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சண்டையிட்ட தெய்வம். இந்தக் கோவிலில் வேகவைத்த சுண்டலும் , டீயும், தேங்காய் சில்லும்  பிரசாதமாகக்  கொடுக்கிறார்கள்.  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கூட ஒரு முத்தப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை மாதங்களில் சென்னையிலும் கூட தெய்யம் விழா நடக்கலாம்.. முகநூலில் அல்லது இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டு நீங்கள் செல்லலாம். கோவிலில் தினமும் ஆட்டம் நடக்கிறது. அது தெய்யமா என்று தெரிய...

வினாவெழுத்துக்கள் क्या हैं ?

உத்தரகாண்டில் ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பள்ளி. அதில் ஓர் ஆசிரியர். அவர் கையில் ஒரு தமிழ் நூலை வைத்துக்கொண்டு தமிழ் செய்யுளாக தேவாரத்தையும் இலக்கணத்தில் வினாவெழுத்துக்கள்  "எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகும்மே "  என்றும்நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அந்தக் குழந்தைகளின் நிலையை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?  அது ஒருபுறம் இருக்கட்டும்.  ஒரு முறை நான் ஊட்டி சென்றபோது ஒரு திரையரங்கில் படக மொழிப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அன்றுவரை அந்த மொழியில் திரைப்படம் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது! அப்படிப்பட்ட ஊரில் ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தொடக்கப்பள்ளி. அதில் படிக்கும் மாணவர்கள் படுக மொழியை தாய்மொழியாகவும் தமிழை வீட்டுக்கு வெளியில் பேசும் மொழியாகவும் ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தியையும் கற்க வேண்டுமென்றால் அக்குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்!  தமிழ் நாட்டில் கணிசமான பேருக்கு இந்தி மூன்றாம் மொழியல்ல; நான்காம் அல்லது ஐந்தாம் மொழி. தெலுங்கு, கன்னடம், ...

செவ்வியல் இசையும் சிக்கன் புரோட்டாவும் ..

போன வாரத்துக்கு முந்தைய வாரம் கிருஷ்ண கான சபாவில் ரவிக்கிரன் கச்சேரி. செவிக்கு உணவு இல்லாத போழ்து தானே வயிற்றுக்கும் ..! கச்சேரிக்கு பின் பார்டர் ரஹமத் கடையில் நல்லெண்ணெயில் பொரித்த நாட்டுக் கோழியுடன் பரோட்டா. போனவாரம் வாணி மஹாலில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரி. அதன் பிறகு இரவு உணவுக்கு வைர மாளிகை. தேங்காய் எண்ணெயில் பொரித்த நாட்டுக்கோழியுடன் பரோட்டா. இன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் தமிழ் கச்சேரி. மகிழ்நனும் என்னுடன் வர வேண்டும் என்று நிற்கிறான். அவனுடைய தமிழார்வத்தையும் கர்நாடக இசை ஆர்வத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!

பட்டப்பெயர்கள்!

அந்த பெரியண்ணன்தான் ,  'டேய் சங்கர்,  கரடியை நான் கூப்பிட்டேன்னு கூப்பிடுடா' என்று சொன்னான்.  எனக்கு கரடியைத் தெரியும், அடுத்த தெருப்பையன். என்னுடைய வயதுதான். உடம்பெல்லாம் முடியாக இருப்பான். 'கரடி, உன்னை குணா அண்ணன் கூப்பிடுது'.  அவன் கோபத்துடன் இடது கையால்  என்னை ஓங்கி  அறைந்து விட்டு குணாவைப் பார்க்க ஓடிவிட்டான். கன்னத்தைத் தடவிக்கொண்டு, நான் விசாரித்ததில் யாருக்கும்  கரடியின் உண்மையான பெயர் தெரியவில்லை. பிறகு, எங்கள் ஆச்சிதான் அவன் அம்மாவிடம் விசாரித்து விட்டுச் சொன்னாள் அவன் பெயர் சுந்தர் ராஜன் என்று. பட்டப்பெயர்கள் வைப்பது இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. இருந்தாலும் பெரிதாக வெளியே தெரிவதில்லை போலும். ஆனால் நாங்கள் படிக்கும்போது நிறையப் பேருக்குப் பட்டப்பெயர் இருக்கும். அதற்கு முன் இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். கல்வி பரவலான பிறகு, பட்டப்பெயர்கள் குறைந்து விட்டனவா? அது என்னவோ தெரியவில்லை,  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் எல்லாமே மொன்னையாக, சுவாரஸ்யம் இல்லாமலே இருக்கும். சில ஆசிரியர்கள் தேர்வி...

இசை எங்கிருந்து வருகிறது!

சிங்கப்பூரில் ஒருமுறை எங்கள் client ஒரு சீன சிங்கப்பூரரிடம் நாங்கள் ஒரு கூட்டமாகச்  சேர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 2004 இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருந்தன.பேச்சு இந்தியாவில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பது பற்றி வந்தது.  பொதுவாக மற்ற நாட்டவர்களிடம் தம் நாட்டின் நடைமுறை நிர்வாகச் சிக்கல்களைக் கிண்டலடித்துப் பேசுவது என்றால் இந்தியர்களுக்குக் கொண்டாட்டந்தான். இந்தியத் தேர்தல்களில் அடையாள அட்டை இப்போதுதான் வந்தது என்றும், யார் வேண்டுமானாலும் கள்ள வோட்டுப்  போடலாம் என்றும் நண்பர்கள் அளந்து விட்டுக்கொண்டிருந்தனர். அந்த இள வயது சிங்கப்பூரருக்கு  அடையாள அட்டை இல்லாமல் தேர்தல் நடப்பதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை.   "அது எப்படி ஒரு ஆளை அடையாள அட்டை இல்லாமல் அங்கீகரிப்பது?" நான் கேட்டேன்... "1948 இல் இருந்து உங்கள் ஊரில் தேர்தல் நடக்கிறது, சுதந்திர சிங்கப்பூரில் 1965 இல் இருந்து தேர்தல் நடக்கிறதே, எப்போது அடையாள அட்டை வந்தது ? " "  " "அடையாள அட்டை வருவதற்கு முன் உங்கள் ஊரில் தேர்தல் எப்படி ந...

Short or Medium

நீண்ட நாட்கள் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது எனக்கு இருக்கும் பிரச்சினை நல்ல முடி திருத்துநர் கிடைப்பது. உண்மையிலே அது அவ்வளவு எளிதல்ல. சிங்கப்பூரிலும், லண்டன் ஹவுன்ஸ்லோவிலும்  ஒவ்வொருமுறை கடையை விட்டு வெளி வரும்போதும்  திருப்தியே இராது. ஆனால் நான் Watford இல் இருந்தபோது  அந்த கவலை எல்லாம் இல்லை. ஒரு நல்ல தொழில்காரர் எனக்கு அமைந்து விட்டார். Watford -இன்   ஒருபகுதியில்  ஆசியர்கள்  அதிகம் இருக்கிறார்கள். பெரும்பாலும் பாகிஸ்தானியர், படேல்கள் மற்றும்  இலங்கைத் தமிழர்கள்.   விப்பெண்டில் சாலையில்   இருக்கும் அந்த முடி திருத்துநர் ஒரு பாகிஸ்தானி. வயது சுமார் 50 இருக்கும். ஒல்லியான உருவம். நல்ல சிரித்த முகத்துடன் இருப்பார். தொழில் சுத்தம், அதனால் பொறுமையாக வேலை செய்வார். ஆனால் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. நான் போய் உட்கார்ந்த உடனே இந்தியில் பேச ஆரம்பித்து விட்டார். எனக்குத் தெரிந்த ஒரே இந்தி வாக்கியமான "இந்தி நஹி மாலும்" ஐ நான் பதிலாகச் சொன்னேன்.அவரால் எனக்கு இந்தி தெரியாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எப்படி இந்திய...

இரண்டாம் பரிசும் மூன்றாம் பரிசும்!

அன்று மதிய உணவு இடைவேளையில்தான் கற்பகவிநாயகம் என்னிடம்  வந்து கேட்டான் , நெல்லை அறிவியல் மையத்தில் தமிழ்நாடு வனத்துறை இன்று 2 மணிக்கு   ஒருகட்டுரைப்போட்டி நடத்துகிறது  நீ போக முடியுமா என்று. அவனுக்கே ஜியாலஜி ராமநாதன் சார் அப்போதுதான் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து அவனே சில டிப்ஸ் கொடுத்தான், எந்த தலைப்பு கொடுத்தாலும் வனங்கள் அழிவு, வனத்துறையின் தியாகம் , களக்காடு சிங்கவால் குரங்கு, வல்லநாடு கலைமான் , முண்டந்துறை புலிகள் எல்லாம் கலந்து கட்டி எழுத வேண்டும் என்று. போன பிறகுதான் தெரிந்தது அது மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி என்று . மண்டலம் என்பது பல மாவட்டங்களை உள்ளடக்கியது என்றறிக. நானும்  எழுதி பேப்பரைக் கொடுத்து விட்டு, ஜங்சன் போய் மகாராஜாவில் தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டுவிட்டு வந்ததோடு அதை மறந்துவிட்டேன். அடுத்த வாரம், வழக்கம்போல் சனிக்கிழமை  மதிய உணவுக்குப் பின் காவேரி இல்லம் வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வனத்துறையின் ஜீப் ஒன்று வந்து நின்றது. என் பெயரைச் சொல்லி அந்த டிரைவர் விசாரித்தார் . "இந்த மாதிரி உ...

விளையும் பயிர் முளையிலே !

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே  எனக்கு NCC இல் சேர வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதற்கு காரணம் அப்போது பள்ளியின் NCC -இல் சார்ஜெண்டாக இருந்த என் சீனியர்  மாணிக்கம்தான். அவருடைய command 'அப்படி' இருக்கும். மாணிக்கம் 'abooooooooout  tErn' சொல்லும்போது வெளியில் நிற்கும் நாமே திரும்பி நிற்க வேண்டும் என்று தோன்றும். command சொல்லி முடித்த பின்பும், சப்தம்  சில நொடிகள் காதில்  கேட்டுக்கொண்டே இருக்கும் (persistence of hearing ?). அதற்குப் பிறகு பள்ளியில் படித்த 6 வருடங்களில், கம்பெனி சார்ஜன்ட் மேஜர் (CSM )டேனியல் பீட்டர்சன் ராஜா மட்டும்தான் அந்த அளவு கமாண்டிங் பவரோடு  இருந்தான். சென்ற வாரம் தற்செயலாகச் சந்தித்த, பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் மாணிக்கத்தின் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர், மாணிக்கத்தின் NCC பிரதாபங்களை நான் சொல்லும்போது வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். "அவர் இப்போ என்ன பண்றாரு தெரியுமா ? "  மாணிக்கத்திற்கு இப்போது 50 வயது இருக்கும். எப்படியும் மேஜர் ஜெனரல் அல்லது லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருப்பார் எ...

சர்வ சிக்ஷ அபியானும் ஊறுகாய் மட்டையும் !

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒருமுறை சில  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  பேச்சு தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தைப்பற்றி வந்தது. அப்போது அங்கு ஒரு நண்பரின் நண்பர் கல்வித்துறையில் ஒரு உயர் பதவியில் இருப்பவரும்  இருந்தார். பேச்சு ND சுந்தரவடிவேலு முதல் காமராஜ் கருணாநிதி , MGR , ஜெயா  என்று எல்லோருடைய பங்களிப்புப் பற்றியும் சுற்றி வந்தது. அப்போதுதான்  SSA என்னும் சர்வ சிக்ஷ அபியான் பற்றி பேச்சு வந்தது. அந்த கல்வித் துறை நண்பர் அதனுடைய moto பள்ளிகளுக்கான "availability accessibility affordability" என்றார். கேரளாவும் தமிழ்நாடும் பல ஆண்டுகள் முன்பே இதை அடைந்து விட்டது என்றார்.  மகிழ்ச்சிதான். அதற்குப் பிறகு யோசித்தால் தமிழ் நாட்டில் இது அப்படியே டாஸ்மாக் கடைகளுக்கும் (பீர் மட்டும் கூலிங் இல்லை!) பொருத்தமாக இருக்கிறது..!

சொர்க்கத்தில் சேராது...!

முதலில் சலீம்தான் என்னைப் பார்த்தான். நான் பெங்களூர் போய்விட்டு சென்னை  திரும்பி வரும்போது சாப்பிடுவதற்காகப் பேருந்தை நிறுத்தியிருந்தார்கள். அவன் வேறொரு பேருந்தில் பெங்களூர் போகிறான். சலீம் எனக்கு 2 வருடம் கல்லூரி இளையன். கொஞ்சம் உருளைக்கிழங்கு போல இருந்தாலும் smart ஆக இருப்பான். முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். அவனுக்கும், அவனுடைய வகுப்புத் தோழி சுகுணாவுக்கும் காதல். கல்லூரி நாட்களில்,   அட்மின் பிளாக்-ஐச் சுற்றி வந்தால் எப்படியும் ஒரு முறை இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்து விடலாம். விடுமுறையாக இருந்தால்,இரண்டு பேரும், ஜங்சன் போவதற்கு, திருக்குறுங்குடியிலிருந்து  வரும் பத்தரை மணி  கணபதி பஸ்சைப் பிடித்துவிடுவார்கள். சுகுணாவும் அழகுதான். எனக்குத் தெரிந்து, சலீமைத் தவிர 13 பேர் அவளைக் காதலித்தார்கள்.... ஒருதலையாக, அவளுக்கும் கூடத்  தெரியாமல்! "எப்படி இருக்கீங்க " என் பெயர் அவனுக்கு ஞாபகம் இல்லை என்பது தெரிந்தது.. " நான் நல்லா இருக்கேன் சலீம் .பெங்களூர் site inspection, முடிச்சுட்டு சென்னை போய்க்கிட்டு இருக்கேன், நீ எப்படி இருக்க" "நல...

யாரைச் சொல்ல ?

சில நாட்களுக்கு முன்பு அலுவலக நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எப்போதும் போல சிலர் பொதுப்புத்தியில் சொன்னார்கள் ... அரசியல்வாதிகள்தான் எல்லா ஊழலும் செய்கிறார்கள் என்று. என்னுடைய கேள்வி, நேரடி அரசியலில் பங்கு பெறாத பொது மக்களுக்கு இதில் பங்கு இல்லையா ? இரண்டு உதாரணங்கள் மட்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எவ்வளவு ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கிறது தெரியுமா ? திமுக ஆட்சியில் முற்றிலும் seniority அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட்டது. இப்போது TRB மூலமாக நிரப்பப்படுகின்றன.இப்போது அரசுப்பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் எந்த ஒரு லஞ்சமும் கொடுக்காமல் வேலைக்கு சேர்த்தவர்கள்தாம். இதைச் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் output எப்படி உள்ளது? அதுபோல குரூப் 4, 2, 1 எல்லாமே நியாயமான தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகின்றன. பெரும்பாலும் நேர்மையாகத் தேர்வு நடப்பதாக அறிகிறேன். ஆனால் நடைமுறை எப்படி இருக்கிறது? எடுத்துக்காட்டாக , முற்றிலும் தங்கள் திறமையைக் காட்டி வேலை வாங்கியவர்கள் ஒற்றை சாரள ம...

தத்தனேரி மயானம்

பள்ளி கல்லூரி நாட்களிலும், மதுரை வைகை ஆயில்ஸ் -இல் வேலை பார்த்தபோதும், பொதுவாக எங்கள் உறவினர் வீடுகளில் துக்கம் என்றால் நானோ என் அம்மாவோதான் போவோம். பெரும்பாலும் நேரம் இருந்தால் நான் தத்தனேரி மயானம் வரை போவது வழக்கம். படிச்ச பையனாச்சே....நான்தான் போய், மயானத்தில் இருக்கும் அந்த மாநகராட்சி அலுவலரிடம் சீட்டு வாங்கி வருவேன் "மாரியம்மாள், வயது 75, மரணத்திற்கான காரணம் முதுமை " - இது போல... சுடுகாட்டில், எங்கள் உறவினர்களுக்கு, அர்ஜுனன்தான் வெட்டியான். அர்ஜுனனும் எங்கள் தூரத்து உறவினர் வேந்தன் சித்தப்பாவும் திருவாப்புடையார் கோவில் ஸ்கூலில் classmates. வேந்தன் சித்தப்பாவின் அப்பா, அதாவது எங்கள் தாத்தா ஒரு சுதந்திர போராட்டத் தியாகி. 1990-களில் அவருக்கு வயது 95-க்கு மேல் இருக்கும். படுத்த படுக்கையாக இருந்தார். சந்திக்கும்போதெல்லாம் அர்ஜுனன் அடிக்கடி சித்தப்பாவிடம் சொல்வது, "வேந்தா , உங்க அப்பா செத்தார்னா, என்கிட்டத்தான் வரணும், நான் பஷ்பமா எரிச்சுக் குடுத்திடறேன்." அப்போதெல்லாம் மின் மயானம் வந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு சராசரியாக அர்ஜுனனுக்கு 3-க்கும் மேற்பட்ட ...

உயிர் கொடுத்த தந்தை

மகாபாரதத்தை படிக்கவில்லை என்றால், நீங்கள் தேவ் தத் பட்நாயக்கின் 'Jaya - An Illustrated Retelling of Mahabharatha ' -ஐப் படிக்க ஆரம்பிக்கலாம், மிக எளிய நடை . நீங்கள் படித்திருந்தாலும் இது வேறு ஒரு பார்வையில் உங்களைப் பார்க்க வைக்கும். தமிழில் விகடன் பிரசுரமாக சாருகேசியின் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது. எனக்குத் தமிழ்தான் வசதி. மகாபாரதத்தில் பல இடங்களில் 'Biological Fathers' வருகிறார்கள் . மிக முக்கிய பாத்திரங்களான திருதராஷ்டிரனும் , பாண்டுவும், விதுரனும் வியாஸருக்குப் பிறந்தவர்கள். ஆனால் அவருக்கு அவர் குழந்தைகள் என்று எந்த உரிமையும் இல்லை. அதுபோல் பாண்டவர்கள் ஐவருக்கும் பாண்டு உடல் ரீதியான தந்தை இல்லை.  மகாபாரதத்தில் இந்த விதி consistent ஆக இருக்கிறது. "விதை விதைத்தவன் யாராக இருந்தாலும், விளைச்சல் நிலஉரிமையாளனுக்கே சொந்தம்".  எனக்கு அரவிந்த் சாமி - டில்லிக்குமார் உறவு பற்றி பாரதி மணி எழுதியது நினைவுக்கு வந்தது. அவருடைய எழுத்தில் அப்படியே கொடுக்கிறேன். தில்லி குமாரின் பூர்வாச்ரமப்பெயர் பஞ்சாபகேசன். அறுபதுகளில் தில்லிக்கு வந்து வேலைபார்த்தார். ...

எங்கேயோ கேட்ட குரல் ....

இப்போதெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளி கல்லூரி நண்பர்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் எந்த position-இல் இருந்தார்களானாலும் ஆச்சர்யமாக இருப்பதில்லை, அதை விட அது பற்றி ஒரு அக்கறை இருப்பதில்லை.எனக்குக் கொஞ்சம் முதிர்ச்சி வந்து விட்டதென்று நானே நினைத்துக்கொண்டிருந்தேன், சென்ற வாரம் வரை. ஏனென்றால், என் பள்ளி கல்லூரி நண்பர்களில் CEO, CTO முதல் சைக்கிள் ரிக்சா இழுக்கும் நண்பன் வரை எல்லா தரப்பினரும் உண்டு. 2ஆம் வகுப்பில் என்னுடன் படித்த முருகன், பெரியார் நிலையத்தில் ரிக்சா இழுத்துக் கொண்டிருந்தான். மதுரையில் இருந்த காலங்களில் பெரியார் நிலையம் வரும்போது என்னைப் பார்த்துவிட்டால் வாயில் கஞ்சா புகையும் , சிவந்த கண்களில் பாசமும் பொங்க "உதயா, எப்படி இருக்க, டீ சாப்பிடு உதயா" என்று கூப்பிடும்போது என்ன செய்வதென்று தெரியாது. அதற்கு காரணம் அவனுடன் சேர்ந்து டீ சாப்பிட எனக்கு தயக்கம் எல்லாம் இல்லை. என் கையில் இருக்கும் காசு பெரியார் நிலையத்தில் பேருந்து ஏறினால் தீக்கதிர் ஆபீஸ் வந்து இறங்கும் வரைதான் இருக்கும். சென்ற முறை ஒரு வழக்கறிஞரிடம் பேசும்போது, என் பள்ளி நண்பன் ஒருவனுக்கு இந...