யாழ்ப்பயணம்
9 நாட்கள் இனிய இலங்கைப்பயணத்தில் 1 நாள்தான் யாழ்ப்பாணம். அங்கே பார்ப்பதற்குக் கூட மிக அழகிய இடங்கள் எல்லாம் இல்லை. ஆனால் இன்னமும் யாழ்தான் மனதில் நிரம்பி வழிகிறது. ஏனென்றால் அது மட்டுமே உணர்வு பூர்வமாக அமைந்தது. உடன் வந்த நண்பர் குடும்பத்தாரின் ஆர்வங்கள் வேறாக இருந்ததால் யாழ்ப்பாணம் வரவில்லை. இரண்டு குடும்பமும் தம்புலா குகைக் கோயில் பார்த்தபிறகு, அவர்கள் தெற்கே போய்விட, நாங்கள் மட்டும் கிளம்பி அனுராதபுரம் வந்து, யாழ்ப்பாணத்துக்கு தொடர்வண்டி (புகையிரதம்!) பிடித்தோம். மீட்டர் கேஜ் பாதையில் 3 மணி நேரம் பயணம். அனுராதாபுரத்திலிருந்து வடக்கே செல்லும் ரயிலில் பெரும்பாலும் தமிழர்கள்தான் கூட வருகிறார்கள். பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா? அதில் தம்புலா, அனுராதாபுரம் எல்லாம் வருகிறது. அந்த இடங்கள் பற்றி எழுதுவதற்காகவே 1950-களில் கல்கி இலங்கை சென்று திரும்பியிருக்கிறார். லண்டன் ஹவுன்ஸ்லோ ,வெம்பிலி , ஈஸ்ட் ஹாம், சிங்கப்பூர் லிட்டில் இந்தியா எல்லாம் நீங்கள் வெளி நாட்டில் இருப்பதைப்போல ஒரு உணர்வையே கொடுக்கும். ஆனால் வட இலங்கை அப்படி அல்ல. நீங்கள் தமிழ்நாட்டின் உ...