Posts

Showing posts with the label Book Review

சின்ரனின் "வாக்குறுதி"

Image
               நெடு நாட்களுக்கு முன் பரிசாகக் கிடைத்த புத்தகம் "வாக்குறுதி". படிக்கப்படாமலேயே இருந்தது, ஆனால் தொடங்கியவுடன் பற்றிக்கொண்டு விட்டது.        பிரிட்டிஷ் சீன பெண் எழுத்தாளர் சின்ரன், சீனாவின் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்களை நேர்காணல் செய்து எழுதிய புத்தகம்தான் "வாக்குறுதி". நேர்காணலுக்கான உட்கரு அவர்களின் காதல் வாழ்வு.      மிகச் சுருக்கமான கேள்விகளுக்கு கிடைக்கும் விரிவான அனுபவங்களின் பதிவு  கிட்டத்தட்ட ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.      தொடக்கத்தில் எண்பது வயது கடந்த, 63 வருடங்கள் திருமண வாழ்வை நிறைவு செய்த முதியவள் ஒருத்தி தன் கணவன் இறந்த பின் கன்னிமைப் பரிசோதனை செய்து கொள்கிறாள்.  அதிர்ச்சி அளிக்கும் அந்தப் பரிசோதனையின் முடிவே இந்த நூல் நம்மை உள்ளிழுத்துக் கொள்ள போதுமானது.      இப்பெண்கள் பேசுவது என்னவோ தங்கள் காதல் அல்லது திருமண வாழ்வு பற்றித்தான். ஆனால் அதனுடன் சேர்ந்து, அதன் பின்னால் விரிவது சீனாவின் நூற்றாண்டு அர...

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

Image
இந்த முறை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லதா (இயற்பெயர் : கனக லதா) எழுதிய சிறுகதைகள் தொகுப்பு "சீனலட்சுமி"  வாங்கினேன்.   நான் அங்கிருந்த  2000- 2008 கால கட்டத்தில், எனக்கு சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அறிமுகமாகி இருக்கவில்லை . அல்லது நானே தொடக்க கால வாசகன்தானே, அதனால் எனக்குத் தெரியவில்லை. லதா ஒரு குறிப்பிடும்படியான தமிழ் எழுத்தாளர் என்பது அவரது கதைகளைப்  படித்த பின்தான் தெரிகிறது. இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது.  இங்கு சில கதைகளை மட்டுமே நான் பேசி இருக்கிறேன். முதல் கதையே உபின் தீவில் (புலாவ் உபின்)  மின்சாரம் வருவதற்கு முன்பிருந்த காலத்து நிலையை சித்தரிக்கிறது.  இன்று ஒருநாள் picnic போகும் இடமாக அறியப்படும் அத்தீவில் தமிழ் குடும்பங்கள் இருந்திருக்கின்றன (இன்னும் இருக்கின்றார்களா?)  என்பதே வியப்பாக இருக்கிறது.  இந்த கதையில் வரும் தாத்தாவை பல பேர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திர...