Posts

Showing posts with the label Kerala

கவி (Gavi ) ஒரு தனிப்பயணம் - 2

Image
  Gavi Resrvoir View 2026 June            Solo trip என்று நான் இந்தப் பயணத்தைக் குறிப்பிட்டாலும்,  பயணத்தில் பேசுவதற்கு ஆள் கிடைக்காமல் போய்விடவில்லை.           நான் பத்தனம்திட்டாவில் பேருந்து ஏறும்போது ஏற்கனவே முன் இருக்கையில் ஒரு 20 வயது இளைஞன்  அமர்ந்திருந்தான். கோழிக்கோடு வடகரையைச் சேர்ந்த CA படிக்கும் மாணவன் அவன். கோழிக்கோடு இல் இருந்து தனியாக கிளம்பி மூணாறு போய் சுற்றிவிட்டு, அங்கிருந்து கொச்சி வந்து ஒரு நாள் செலவழித்து, அங்கிருந்து இரவு 1 மணிக்கு பத்தனம்திட்டா வந்திருக்கிறான். அங்கேயே பஸ் டெப்போவில் குமிளி செல்லும் பேருந்தைக் கண்டுபிடித்து அதில் ஏறி தூங்கி விட்டு, என்னுடன் பயணிக்கிறான். அடுத்து குமுளியில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் செல்வது அவன் திட்டம்.  என்னுடைய பயணங்களில் பல Solo Travellers ஐ பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு சிறிய வயதுக்காரரை பார்த்ததில்லை.           அவனும் நானும் சினிமா, படிப்பு, பயணங்கள், கொஞ்சம் போல கேரள-தமிழக அரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம்....

கவி (Gavi ) ஒரு தனிப்பயணம் - 1

Image
                           ஏற்கனவே பார்த்த இடத்தை மறுபடி பார்ப்பதில் என்ன thrill இருக்கிறது என்று கேட்டான் மகிழ்நன். 2022 இல் கவிக்கு  நாங்கள் குடும்பத்துடன் போய் இருக்கிறோம்.  இப்போது  மீண்டும் 2026 ஜூன் மாதம் நான் மட்டும் கவிக்கு கிளம்பியதால் இந்த கேள்வி. உண்மையிலேயே இரண்டு பயணத்திற்கும் பெரிய வேறுபாடுகளும், இப்போது சென்றதில் புதிய அனுபவங்களும் இருக்கின்றன.  சென்ற முறை நாங்கள் சென்றது காரில்,குடும்பத்துடன்.  இந்த முறை நான் மட்டும் பேருந்தில்.  சென்ற முறை ஏப்ரல் மே மாதத்தில் கேரளத்தின் கடும் கோடையில் இந்த முறை ஜூன் மாதம் பருவ மழை தொடங்கிய பின்.       அதுமட்டுமல்ல, இது ஒரு பட்ஜெட் பயணம். கதவு முதல் கதவு வரை எடுத்துக்கொண்டால் எல்லாமே பொதுப் போக்குவரத்து மூலம் மட்டுமே. எங்குமே டாக்ஸி அல்லது குறைந்த பட்சம் ஆட்டோ கூட எடுக்கவில்லை.         Getting drenched in Meghalaya என்றொரு சுற்றுலா உண்டு.  தீவிர பருவ மழை காலத்தில் மேகாலயாவில் உள்ள சிரப...