Posts

Showing posts with the label Sonmarg

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் Farah's Homestay -இல் காலை உணவை முடித்துக் கிளம்ப  10 மணிக்கு மேல் ஆகி விட்டது. அங்கிருந்து சோன்மார்க் 14 கி மீ தூரத்தில் இருந்தது. வெளியூரில் இருந்து வரும் tourist கார்கள், சோன்மார்க் ஊர் வரை மட்டுமே செல்ல முடியும். சோன்மார்க்கில் உள்ள இடங்களை பார்க்க வேண்டும் என்றால் அந்த ஊரில் இருக்கும் யூனியன் டாக்ஸிகளைத்தான் நாம் பயன் படுத்த முடியும். இது ஒரு வகையில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பிற முதலாளிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு.  யாசிர் எங்களுக்காக ஒரு யூனியன் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்தார். போகும்வழிகளில் எல்லாம் HAWS (High Altitude Warfare School) எனப்படும் ராணுவப்  பயிற்சி மையத்தின் வீரர்களுக்கான பயிற்சி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ராணுவத்தின் வாகனமும் அதற்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களும்தான். பிரம்மாண்டமான பனி படர்ந்த மலை சாலையின் சிறிது தூரத்திலேயே நெடிதுயர்ந்து நிற்பது, சற்று திகைப்பாக இருக்கிறது. இமயத்தின் சிறப்பே அதுதான். நேபாளத்தில் பொ...

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

Image
குடும்பத்துடன் நீண்ட பயணம் செய்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. முதல் மூன்று ஆண்டுகள் கொரோனா முதலில் முடக்கிப் போட்டது என்றால், மகிழ்நனின் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கான ஆயத்தங்கள் என்று மீண்டும் ஒரு வருடம் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. ஒருவாறாக, மே இரண்டாம் வாரத்திற்குப் பிறகு பயணம் செல்லலாம் என்று திட்டமிடப் பட்டது. முதலில் தாய்லாந்து தான் செல்வதாகத் திட்டம். ஆனால் தாய்லாந்தில் மே மாதம் அடிக்கிற வெயிலும் சென்னைக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதால்  காஷ்மீர் என்று முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்தில் நால்வரும், உறவினரின் குடும்பம் மூன்று பேரும் என எங்கள் பயணத்தில் மொத்தம் 7 பேர். சென்ற ஆண்டு, நான் மட்டும் ஸ்பிட்டி சமவெளி சென்ற போது பணய ஏற்பாட்டாளர் வழியாக சென்றேன். ஆனால் இந்த முறை அனைத்து ஏற்பாடுகளும் நாங்களே செய்து கொண்டோம். இதில் சாதக பாதகங்கள் உண்டு.   பாதகம் என்றால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும். எந்த கால வரிசையில் எங்கெங்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்து, ஹோட்டல் முன் பதிவு செய்யவேண்டும், பயண வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வேண்டும். எங்கு என...