கவி (Gavi ) ஒரு தனிப்பயணம் - 1
ஏற்கனவே பார்த்த இடத்தை மறுபடி பார்ப்பதில் என்ன thrill இருக்கிறது என்று கேட்டான் மகிழ்நன். 2022 இல் கவிக்கு நாங்கள் குடும்பத்துடன் போய் இருக்கிறோம். இப்போது மீண்டும் 2026 ஜூன் மாதம் நான் மட்டும் கவிக்கு கிளம்பியதால் இந்த கேள்வி. உண்மையிலேயே இரண்டு பயணத்திற்கும் பெரிய வேறுபாடுகளும், இப்போது சென்றதில் புதிய அனுபவங்களும் இருக்கின்றன. சென்ற முறை நாங்கள் சென்றது காரில்,குடும்பத்துடன். இந்த முறை நான் மட்டும் பேருந்தில். சென்ற முறை ஏப்ரல் மே மாதத்தில் கேரளத்தின் கடும் கோடையில் இந்த முறை ஜூன் மாதம் பருவ மழை தொடங்கிய பின். அதுமட்டுமல்ல, இது ஒரு பட்ஜெட் பயணம். கதவு முதல் கதவு வரை எடுத்துக்கொண்டால் எல்லாமே பொதுப் போக்குவரத்து மூலம் மட்டுமே. எங்குமே டாக்ஸி அல்லது குறைந்த பட்சம் ஆட்டோ கூட எடுக்கவில்லை. Getting drenched in Meghalaya என்றொரு சுற்றுலா உண்டு. தீவிர பருவ மழை காலத்தில் மேகாலயாவில் உள்ள சிரப...