Posts

Showing posts with the label History

EV கல்யாணியும் சாரதா சட்டமும்

E.V .கல்யாணி பிரசவ மருத்துவமனை சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் ப்ரெசிடெண்சி ஹோட்டல் பின்புறம் இருக்கிறது. இப்போது சீதாபதி கிளினிக்-இந்த கீழ் செயல்படுகிறது. சென்னையின் மிகச்சிறந்த பிரசவ மருத்துவ மனைகளில் ஒன்று. அதை நிறுவியவர்தான் Dr .E .V . கல்யாணி. அவர் தந்தை E .V .ஸ்ரீனிவாசன் ஒரு கண் மருத்துவர்.  கல்யாணி 1930 களில் MBBS ,MD , DGO  முடித்தார். தமிழ்நாட்டில் அந்த சாதனையைச் செய்த முதல் பெண் அவர்தான்.   40 வருடங்கள் அரசு மருத்துவமனைகளில் வேலை, அதில் கடைசி பத்து வருடங்கள் பேராசியராகவும் வேலை பார்த்த கல்யாணி  சொந்த மருத்துவ மனையைத் தொடங்கினார். 83 வயது வரை சேவை செய்த  அவர் 2001 இல் காலமானார்.  பெரும்பாலும் சுகப்பிரசவங்களுக்கு முயற்சி செய்யும் ஒரு மருத்துவமனை இது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இங்குதான் முதலில் மனைவியின் பிரசவத்தின் போது கணவர் உடன் இருக்கலாம்  என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்க  வேண்டும் . 2011-இல் என் மகள் இன்பா இங்குதான் பிறந்தாள். Dr. E V .கல்யாணி ஒரு Child Widow . டாக்டர் கல்யாணி பற்றி பேச வந்தது எதனா...