Posts

Showing posts with the label Jibi

பயணங்கள் தொடர்கின்றன - 4 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 1 - ஜிபி முதல் சிட்குள் வரை

Image
         என் நண்பர் ஒருவர் டிவிஎஸ் XL வைத்திருந்தவர், அடுத்து ஒரு ராயல் என்பீல்ட் - புல்லட் வாங்கினார். வாங்கி சில வாரங்களுக்குள்ளேயே , டெல்லியிலிருந்து லே- லடாக் வரை தன்னுடைய புல்லட்டில் ஒரு சாகசப் பயணம் போனார். அது அவருக்கு மிகக் கொடுமையான அனுபவமாக  அமைந்துவிட்டது. மொத்த பயணமும் அவருக்கு பயமாகவே  இருந்திருக்கிறது . திரும்பி வரும்போது வண்டியை பார்சல் சர்வீஸில் ஒப்படைத்து விட்டு விமானத்தில் வந்து விட்டார். அது  எனக்கு ஒரு எதிர் மறை எண்ணத்தைத் தானே உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் அந்த இமயமலைப் பகுதியின் மீது ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணியது ( கவனிக்க ...புல்லட் பயணத்தில் அல்ல!) இது ஒரு புறம் இருக்க, கொரோனா நாட்களில் யூ -டியூபில் , சில Travel Vlog - பார்க்கும்போது தான்யா (Tanya Khanijow) என்ற யூ -டுயூபரின்   ஸ்பிட்டி வேலி  பயண வீடியோக்கள் கிடைத்தன. அது இமயமலையின் வேறொரு பக்கத்தைக் காட்டியது. அது அதன் தனித்துவம் வாய்ந்த புவியமைப்பு. ஸ்பிட்டி வேலி என்பது குல்லு -மணாலி போல அல்லது ஊட்டி ,டார்ஜிலிங் போல ஒரு கோடை வாசஸ்தலம் அல்ல. இது மலையில...