வியட்நாம் பயணம் - Ha Long Bay
Nin Binh போலவே Ha Long Bay-க்கும் , தொகுப்பு பயணம் என்றால் Old Quarters லிருக்கும் விடுதி வாசலிலேயே வந்து அழைத்துச் செல்கிறார்கள். 8 மணிக்கு கிளம்பினால் Ha Long Bay - படகுத்துறையில் 11 மணி போல இறக்கி விடுகிறார்கள். இந்தியர்கள் என்றால் எல்லாமே சைவமாக இருப்பார்கள் என்று ஒரு புரளியை வடக்கிந்தியர்கள் உருவாக்கி விட்டார்கள் போல. check-in சோதனையின் போதுதான் கவனித்தோம். எங்கள் உணவுத் தேர்வாக "சைவம்" என்று போட்டிருந்தார்கள். என்னடா இது மதுரக்காரனுக்கு வந்த சோதனை என்று நாங்கள் கொந்தளித்து விட்டோம்! நீங்கள்தான் இந்தியராயிற்றே, அசைவம் சாப்பிடுவீர்களா என்று ஒரு தடவைக்கு மூன்று தடவை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பிறகு மதிய உணவின் போது மேசையில் முதலில் வந்த வாத்துக்கறியைப் பார்த்த பிறகுதான் நிம்மதி பிறந்தது! ...