Posts

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

Image
இந்த முறை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லதா (இயற்பெயர் : கனக லதா) எழுதிய சிறுகதைகள் தொகுப்பு "சீனலட்சுமி"  வாங்கினேன்.   நான் அங்கிருந்த  2000- 2008 கால கட்டத்தில், எனக்கு சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அறிமுகமாகி இருக்கவில்லை . அல்லது நானே தொடக்க கால வாசகன்தானே, அதனால் எனக்குத் தெரியவில்லை. லதா ஒரு குறிப்பிடும்படியான தமிழ் எழுத்தாளர் என்பது அவரது கதைகளைப்  படித்த பின்தான் தெரிகிறது. இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது.  இங்கு சில கதைகளை மட்டுமே நான் பேசி இருக்கிறேன். முதல் கதையே உபின் தீவில் (புலாவ் உபின்)  மின்சாரம் வருவதற்கு முன்பிருந்த காலத்து நிலையை சித்தரிக்கிறது.  இன்று ஒருநாள் picnic போகும் இடமாக அறியப்படும் அத்தீவில் தமிழ் குடும்பங்கள் இருந்திருக்கின்றன (இன்னும் இருக்கின்றார்களா?)  என்பதே வியப்பாக இருக்கிறது.  இந்த கதையில் வரும் தாத்தாவை பல பேர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம்.  "இளவெய்யில்" நவீன

பயணங்கள் தொடர்கின்றன - 8 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) Final - காசா (Kaza) - சந்திரதால் - மணாலி

Image
 ஆறாம் நாள் காலை காசா-வில் இருந்து காலை 9:00 மணிக்குக் கிளம்பிவிட்டோம்.  காஸாவில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் போய் விட்டால் மணாலி வரும்வரை எந்த தொலைபேசி சேவையும் இருக்காது. குறைந்தபட்சம் 27 மணி நேரம் நம்மை யாரும் தொடர்பு கொள்ள முடியாது. முதலில் கீ பௌத்த மடாலயம் (Key Monastery).  ஆயிரம் வருடங்கள் பழமையான ஒன்று. ஸ்பிட்டி சமவெளியில்,  மிகப் பெரிய திறந்த வெளிக்கு நடுவே, சற்றே உயரமான குன்றின் மேல் அமைந்துள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரு castle - போலத் தெரியும். பல்வேறு படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த மடாலயம் .  உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்கும் ஒரு பால் இல்லாத தேநீர் - (cinnamon பட்டை தூக்கலாகப் போட்டு!) கொடுக்கிறார்கள்.  உள்ளே வெளிச்சம் குறைவாக இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது, அதனால் அந்த இடத்துக்குள் மட்டும் நாங்கள் அனுமதிக்கப் படவில்லை. வெளியில் உள்ள நவீன கட்டடங்கள் தவிர உள்ளே இருக்கும் அறைகள் எல்லாம் மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கலாம். உள்ளே துறவிகள் தனியே அமர்ந்து தியானத்தில் ஈடுபடும் இடங்கள் எல்லாம் இன்னும்

பயணங்கள் தொடர்கின்றன - 7 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 4 - காசா (Kaza) - ஹிக்கிம் (Hikkim), லாங்சா (Langza), காமிக்(Komic)

Image
ஐந்தாம் நாள் போகத் திட்டமிட்ட இடங்கள் எல்லாம் காசாவைச் சுற்றியுள்ள இடங்கள்தான். அதிக தூரம் போக வேண்டியதில்லை. கொஞ்சம் நிதானமாகக் கிளம்பலாம். காசா சற்றே பெரிய ஊர். எங்கள் பயணத்தில் கடைசி ATM இங்குதான் உள்ளது. அதிலும் பல நேரங்களில் பணம் தீர்ந்து போய்விடும் என்றார்கள். நாங்கள் பார்க்கும்போதே பணம் எடுப்பதற்குப் பல பேர் வரிசையில் நின்றார்கள். எங்கள் பயண முகவர் சொன்னபடி முதலிலேயே cash எடுத்துச் சென்றுவிட்டோம். காசாவில் மற்றொரு பிரச்சினை Power Failure. எப்போதாவதுதான் சப்ளை இருக்கிறது. அதற்குள் ஹீட்டர் போட்டு குளித்துக் கொள்ளவேண்டும். மொபைல் மற்றும்  பவர் பேங்க்- ஐச் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.  காஸாவில் இருந்து கிளம்பிய பின் இரண்டு நாட்கள் பவர் பேங்க் இல்லாமல் சமாளிக்க முடியாது. காசா வரை ஏர்டெல், ஜியோ இரண்டும் வேலை செய்கின்றன. வோடபோன் முதல் நாளில் இருந்தே வேலை செய்யவில்லை. எங்கள் பயண முகவர் சொன்னது போல நான் கூடுதலாக ஒரு BSNL சிம் வாங்கிக்கொண்டு சென்றேன்.அதன் Voice Network மட்டுமே வேலை செய்கிறது, Data - ம்ஹும் ...சுத்தம்! இன்று முதலில் ஹிக்கிம் - கிராமம். காஸாவில் இருந்து 15 கிமீ மேலே சென்றால

பயணங்கள் தொடர்கின்றன - 6 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 3 - நாக்கோ (Nako) முதல் காசா (Kaza) வரை

Image
நான்காம் நாள் காலை வேனில் கிளம்பும் முன் எங்களை நாக்கோ கிராமத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வரச்சொல்லி விட்டார்கள். அதனால் அதிகாலை 6 மணிக்கே கிளம்பி ஒரு ட்ரெக்கிங், மலை மீது 40 நிமிடம் ஏறினால் ஒரு சிறிய கோவில். அங்கிருந்து பார்க்கும்போது தெரியும் நாக்கோ கிராமம் வேறொரு வகையில் அழகு!  நாக்கோவின் புத்த மடாலயம், நாங்கள் செல்லும்போது திறக்கவில்லை. 7 மணிக்கே souvenir கடை ஒன்றைத் திறந்து வைத்து ஒரு பாட்டியம்மாள் எல்லோரையும் அழைத்துக்கொண்டிருந்தது. மூன்று ஜோடி தொங்கட்டான்களை மொத்தம் 750 ரூபாய் கொடுத்து வாங்கினேன். (வீட்டில் கேட்டால் ஜோடி 60 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார்கள்). ஆனால் இவ்வளவு உயரத்தில், ஆண்டில் 5 மாதம் மட்டும்  சுற்றுலாவை நம்பி இருக்கும் கள்ளமற்ற மனிதர்கள் வாழும் இந்த ஊரில் விலை ஒன்றும் அதிகம் இல்லை என்றுதான் சொல்வேன். இன்றைய திட்டம், நாக்கோவில் இருந்து க்யூ (Gue) , அங்கிருந்து தாபோ (Tabo ), தங்கர் (Dhankar) வழியாக காசா (Kaza) சென்றடைய வேண்டும். இங்கு ஒன்று சொல்லவேண்டும்.... பல தார திருமணத் தடை சட்டம்   அண்ணல் அம்பேத்காரால் 1951-இல் பரிந்துரைக்கப்பட்டது . பெரும் எதிர்ப்பு க

பயணங்கள் தொடர்கின்றன - 5 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 2 - சிட்குள் முதல் நாக்கோ வரை

Image
  மூன்றாம் நாள் காலை 5 மணிக்கே எழுந்து விட்டோம் டார்ஜிலிங் போனால் Tiger Hills சூரிய உதயம் என்று ஒன்றைத் தனியாக கூட்டிப்போய் காண்பிப்பார்கள். சிட்குளில் நாங்கள் தங்குமிடத்தில் இருந்து பார்த்தால்  சற்றே சிறிய அளவில் அது சாதாரணமாகக் காணக் கிடைக்கிறது!  மலையில் காலை 4 மணிக்கெல்லாம் வெளிச்சம் வந்து விடுகிறது. வெளியில் 9 டிகிரி குளிர், பாஸ்பா நதியைச் சென்று பார்த்தோம். தண்ணீர் இரு கரை புரண்டெல்லாம் போகவில்லை என்றாலும் வேகமாக ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்குப் போவதுதான் காரணம். காலை உணவுக்கு முன் சிட்குள் கிராமத்தின் உள்ளே சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பார்த்தால் கடலோரம் இருக்கும் எல்லா கிராமும் கூட கடைசி கிராமந்தானே!  ஆனால், இந்த கிராமத்திற்கு அப்பால் வேறு சாலைகள் இல்லை. ஒரு பக்கம் ஆறு, ஒரு பக்கம் மலை, அடுத்த புறம் திபெத் -சீன எல்லை என்பதால்  இந்த ஊருக்கு வந்துவிட்டு வேறு ஊருக்குப் போக வேண்டும் என்றால் வந்த சாலையிலேதான் திரும்ப வரவேண்டும். அதனால் கடைசி கிராமம் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். அதனால் சுற்றுலாவ

பயணங்கள் தொடர்கின்றன - 4 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 1 - ஜிபி முதல் சிட்குள் வரை

Image
         என் நண்பர் ஒருவர் டிவிஎஸ் XL வைத்திருந்தவர், அடுத்து ஒரு ராயல் என்பீல்ட் - புல்லட் வாங்கினார். வாங்கி சில வாரங்களுக்குள்ளேயே , டெல்லியிலிருந்து லே- லடாக் வரை தன்னுடைய புல்லட்டில் ஒரு சாகசப் பயணம் போனார். அது அவருக்கு மிகக் கொடுமையான அனுபவமாக  அமைந்துவிட்டது. மொத்த பயணமும் அவருக்கு பயமாகவே  இருந்திருக்கிறது . திரும்பி வரும்போது வண்டியை பார்சல் சர்வீஸில் ஒப்படைத்து விட்டு விமானத்தில் வந்து விட்டார். அது  எனக்கு ஒரு எதிர் மறை எண்ணத்தைத் தானே உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் அந்த இமயமலைப் பகுதியின் மீது ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணியது ( கவனிக்க ...புல்லட் பயணத்தில் அல்ல!) இது ஒரு புறம் இருக்க, கொரோனா நாட்களில் யூ -டியூபில் , சில Travel Vlog - பார்க்கும்போது தான்யா (Tanya Khanijow) என்ற யூ -டுயூபரின்   ஸ்பிட்டி வேலி  பயண வீடியோக்கள் கிடைத்தன. அது இமயமலையின் வேறொரு பக்கத்தைக் காட்டியது. அது அதன் தனித்துவம் வாய்ந்த புவியமைப்பு. ஸ்பிட்டி வேலி என்பது குல்லு -மணாலி போல அல்லது ஊட்டி ,டார்ஜிலிங் போல ஒரு கோடை வாசஸ்தலம் அல்ல. இது மலையில் அமைந்திருக்கும் ஒரு குளிர் பாலைவனம். பலவாறாக யோசித்து, பி

வினாவெழுத்துக்கள் क्या हैं ?

உத்தரகாண்டில் ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பள்ளி. அதில் ஓர் ஆசிரியர். அவர் கையில் ஒரு தமிழ் நூலை வைத்துக்கொண்டு தமிழ் செய்யுளாக தேவாரத்தையும் இலக்கணத்தில் வினாவெழுத்துக்கள்  "எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகும்மே "  என்றும்நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அந்தக் குழந்தைகளின் நிலையை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?  அது ஒருபுறம் இருக்கட்டும்.  ஒரு முறை நான் ஊட்டி சென்றபோது ஒரு திரையரங்கில் படக மொழிப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அன்றுவரை அந்த மொழியில் திரைப்படம் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது! அப்படிப்பட்ட ஊரில் ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தொடக்கப்பள்ளி. அதில் படிக்கும் மாணவர்கள் படுக மொழியை தாய்மொழியாகவும் தமிழை வீட்டுக்கு வெளியில் பேசும் மொழியாகவும் ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தியையும் கற்க வேண்டுமென்றால் அக்குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்!  தமிழ் நாட்டில் கணிசமான பேருக்கு இந்தி மூன்றாம் மொழியல்ல; நான்காம் அல்லது ஐந்தாம் மொழி. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என்