Posts

Showing posts from October, 2018

பட்டப்பெயர்கள்!

அந்த பெரியண்ணன்தான் ,  'டேய் சங்கர்,  கரடியை நான் கூப்பிட்டேன்னு கூப்பிடுடா' என்று சொன்னான்.  எனக்கு கரடியைத் தெரியும், அடுத்த தெருப்பையன். என்னுடைய வயதுதான். உடம்பெல்லாம் முடியாக இருப்பான். 'கரடி, உன்னை குணா அண்ணன் கூப்பிடுது'.  அவன் கோபத்துடன் இடது கையால்  என்னை ஓங்கி  அறைந்து விட்டு குணாவைப் பார்க்க ஓடிவிட்டான். கன்னத்தைத் தடவிக்கொண்டு, நான் விசாரித்ததில் யாருக்கும்  கரடியின் உண்மையான பெயர் தெரியவில்லை. பிறகு, எங்கள் ஆச்சிதான் அவன் அம்மாவிடம் விசாரித்து விட்டுச் சொன்னாள் அவன் பெயர் சுந்தர் ராஜன் என்று. பட்டப்பெயர்கள் வைப்பது இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. இருந்தாலும் பெரிதாக வெளியே தெரிவதில்லை போலும். ஆனால் நாங்கள் படிக்கும்போது நிறையப் பேருக்குப் பட்டப்பெயர் இருக்கும். அதற்கு முன் இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். கல்வி பரவலான பிறகு, பட்டப்பெயர்கள் குறைந்து விட்டனவா? அது என்னவோ தெரியவில்லை,  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் எல்லாமே மொன்னையாக, சுவாரஸ்யம் இல்லாமலே இருக்கும். சில ஆசிரியர்கள் தேர்வில் பெயில் ஆகி இரண்டாம் வருடம

காந்தியும் சர்ச்சிலும் !

காந்தி இர்வின் ஒப்பந்தம் பற்றி விக்கிப்பீடியாவில் தேடிக்கொண்டிருந்தேன். 1931 மார்ச் மாதம் கையெழுத்தான அந்த  ஒப்பந்தம் பெரும்பாலான ஆங்கிலேயர்களுக்குப்  பிடிக்கவில்லை. " Be hard on the problem, soft on the people" என்று நிர்வாகவியலில் சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் சர்ச்சிலோ பிரச்சினைகளைப் பேசுவதைவிட காந்தியை வசைபாடுவதில்தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்.அதிலும் என்ன ஆணவம்! Many British officials in India, and in England, were outraged by the idea of a pact with a party whose avowed purpose was the destruction of the British Raj. Winston Churchill publicly expressed his disgust "...at the nauseating and humiliating spectacle of this one-time Inner Temple lawyer, now seditious fakir , striding half-naked up the steps of the Viceroy’s palace, there to negotiate and parley on equal terms with the representative of the King Emperor." அதைத்தொடர்ந்து, செப்டம்பரில் நடந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள வரும்போது, காந்தி மன்னரைச் சந்திக்கிறார். வைஸ்ராய் என்