Posts

Showing posts from May, 2023

பயணங்களில் மனிதர்கள்-1 !

Image
 எப்போது கேரளா சுற்றுலா சென்றாலும் ஒரு நல்ல மனிதரை (நல்ல மனிதரை எப்படித் தீர்மானிப்பது?) ... சரி...பணத்துக்கு ஆசைப்படாத ஒரு மனிதரைப் பார்த்து விடலாம். 2019 டிசம்பர் மாதத்தில் கண்ணூர் பயணம். ஆறு குடும்பங்களில் இருந்து மொத்தம் 20 பேர் சென்ற பயணம்.அந்தப் பயணம் பற்றி தனியாக எழுத வேண்டும். ஒருநாள் காலை "ஆராளம்" காட்டுக்குள் போய்விட்டு நீண்ட பயணத்துக்குப் பின்  பராசனிக்கடவு என்ற ஊரில் இருக்கும் முத்தப்பன் கோவில் சென்றோம். புகழ் பெற்ற "தெய்யம் விழா" இந்தக் கோவிலில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு. உத்தம வில்லன் படத்தில் கூட கமல் "தெய்யம்" ஆடுவார். முத்தப்பன் ஒரு புரட்சி தெய்வம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சண்டையிட்ட தெய்வம். இந்தக் கோவிலில் வேகவைத்த சுண்டலும் , டீயும், தேங்காய் சில்லும்  பிரசாதமாகக்  கொடுக்கிறார்கள்.  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கூட ஒரு முத்தப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை மாதங்களில் சென்னையிலும் கூட தெய்யம் விழா நடக்கலாம்.. முகநூலில் அல்லது இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டு நீங்கள் செல்லலாம். கோவிலில் தினமும் ஆட்டம் நடக்கிறது. அது தெய்யமா என்று தெரி