Posts

Showing posts from September, 2020

வினாவெழுத்துக்கள் क्या हैं ?

உத்தரகாண்டில் ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பள்ளி. அதில் ஓர் ஆசிரியர். அவர் கையில் ஒரு தமிழ் நூலை வைத்துக்கொண்டு தமிழ் செய்யுளாக தேவாரத்தையும் இலக்கணத்தில் வினாவெழுத்துக்கள்  "எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகும்மே "  என்றும்நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அந்தக் குழந்தைகளின் நிலையை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?  அது ஒருபுறம் இருக்கட்டும்.  ஒரு முறை நான் ஊட்டி சென்றபோது ஒரு திரையரங்கில் படக மொழிப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அன்றுவரை அந்த மொழியில் திரைப்படம் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது! அப்படிப்பட்ட ஊரில் ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தொடக்கப்பள்ளி. அதில் படிக்கும் மாணவர்கள் படுக மொழியை தாய்மொழியாகவும் தமிழை வீட்டுக்கு வெளியில் பேசும் மொழியாகவும் ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தியையும் கற்க வேண்டுமென்றால் அக்குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்!  தமிழ் நாட்டில் கணிசமான பேருக்கு இந்தி மூன்றாம் மொழியல்ல; நான்காம் அல்லது ஐந்தாம் மொழி. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என்