Posts

Showing posts from June, 2023

காஷ்மீர்ப் பயணம்- 5 : பஹல்கம் (Pahalgam) - ஸ்ரீநகர் - குல்மார்க் (Gulmarg)

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர் காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam)           மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே யாசிர் வந்துவிட்டார்.   காலை உணவாக ஆலு பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, Oswal Cottage -இல் இருந்து கிளம்பினோம்.           இந்த இரண்டு நாட்களில் லிதர் ஆற்றில் தண்ணீர்ப் பெருக்கு அதிகரித்திருந்தது. மேலும் கீழே  செல்லச் செல்ல பல கிளை ஆறுகளும், அருவிகளும் சேர்ந்து  தண்ணீர் பெருகி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் Yenner என்ற இடத்தில் நிறுத்தி சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.            இன்று ஸ்ரீநகர் சென்று சில இடங்கள் பார்ப்பதாகத் திட்டம். ஆனால் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை பெய்தால் மொஹல் தோட்டங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு.                நான் ஹஸ்ரத்பால் தர்ஹாவுக்கு செல்லலாம் என்று சொன்னேன். அது 1990-களில் செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெறும் பெயர்.             1993 அக்டோபர் மாதத்தில் ஹஸ்ரத்பால் தர்ஹா-வில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.  அதன

காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam)

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்      அடுத்த நாள் காலை பஹல்கம் (Pahalgam)  புறப்பட வேண்டும். யாசிர் எங்களிடம் பள்ளிப் பேருந்துகள் வரத் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஆகிவிடும் என்பதால் காலை 7 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும்படி சொன்னார். மே மாதக் கடைசியில் பள்ளிகள் நடக்குமா என்ன ?           காஷ்மீரின்  கல்வியாண்டு இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வேறுபட்டது. அது டிசம்பர் தொடங்கி நவம்பரில் முடியும். ஜனவரிமுதல் மார்ச் வரை மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் காஷ்மீர் மாணவர்களுக்கு அதுதான் விடுமுறைக்காலம். ஏப்ரல் முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கி, நவம்பரில் தேர்வுகள் இருக்கும்.           காஷ்மீரில் மட்டும் தான்  இப்படி. ஜம்முவின் பெரும்பாலான பகுதிகளில் கல்வியாண்டு  ஜூன் தொடங்கி ஏப்ரல் வரை  செயல்படுகிறது.                     அங்கு  பல முறை சமச்சீரான கல்வியாண்டு கொண்டு வருவதற்கு  முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. சமீபத்தில் கவர்னர் அரசு காஷ்மீரின் கல்வியாண்டை ஜூன் முதல் ஏப்ரல் வரை மாற்றி அமைத

காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்

Image
  காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்         காஷ்மீர் செல்வது  பாதுகாப்பானதுதானா  என்று நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.ஸ்ரீநகரில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் குறைந்தபட்சம் ஒரு CRPF - வீரர் கையில் யந்திரத் துப்பாக்கியுடன் நிற்கிறார். நான் பார்த்தவரை எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை.            சினிமாக்களும் ஊடகங்களும் சிறிய விஷயங்களையும் பெரிதுபடுத்துவார்கள். 1980-இன் இறுதிப்பகுதிகள் அல்லது 1990-களின் தொடக்கம் போல இப்போதெல்லாம் இல்லை (ரோஜா திரைப்படம் 1992-இல் வெளியானது).  2008 -ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 60% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.  2009 -இல் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக காஷ்மீர் இருந்திருக்கிறது.            காஷ்மீரில்  கணிசமான மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாவைச் சார்ந்தே  உள்ளது. கொரோனா இவர்களை அதிகமாகப் பாதித்திருக்கிறது.  அவர்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். அவர்கள் வர வேண்டும் என்றால் ஊர் அமைதியானதாக இருக்கவேண்டும்.            இப்போது நீங்கள் YouTube-இல் தேடினால் கூட புதியதாக எத்தனை காஷ்ம

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் Farah's Homestay -இல் காலை உணவை முடித்துக் கிளம்ப  10 மணிக்கு மேல் ஆகி விட்டது. அங்கிருந்து சோன்மார்க் 14 கி மீ தூரத்தில் இருந்தது. வெளியூரில் இருந்து வரும் tourist கார்கள், சோன்மார்க் ஊர் வரை மட்டுமே செல்ல முடியும். சோன்மார்க்கில் உள்ள இடங்களை பார்க்க வேண்டும் என்றால் அந்த ஊரில் இருக்கும் யூனியன் டாக்ஸிகளைத்தான் நாம் பயன் படுத்த முடியும். இது ஒரு வகையில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பிற முதலாளிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு.  யாசிர் எங்களுக்காக ஒரு யூனியன் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்தார். போகும்வழிகளில் எல்லாம் HAWS (High Altitude Warfare School) எனப்படும் ராணுவப்  பயிற்சி மையத்தின் வீரர்களுக்கான பயிற்சி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ராணுவத்தின் வாகனமும் அதற்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களும்தான். பிரம்மாண்டமான பனி படர்ந்த மலை சாலையின் சிறிது தூரத்திலேயே நெடிதுயர்ந்து நிற்பது, சற்று திகைப்பாக இருக்கிறது. இமயத்தின் சிறப்பே அதுதான். நேபாளத்தில் பொக்காரா-வில

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

Image
குடும்பத்துடன் நீண்ட பயணம் செய்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. முதல் மூன்று ஆண்டுகள் கொரோனா முதலில் முடக்கிப் போட்டது என்றால், மகிழ்நனின் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கான ஆயத்தங்கள் என்று மீண்டும் ஒரு வருடம் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. ஒருவாறாக, மே இரண்டாம் வாரத்திற்குப் பிறகு பயணம் செல்லலாம் என்று திட்டமிடப் பட்டது. முதலில் தாய்லாந்து தான் செல்வதாகத் திட்டம். ஆனால் தாய்லாந்தில் மே மாதம் அடிக்கிற வெயிலும் சென்னைக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதால்  காஷ்மீர் என்று முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்தில் நால்வரும், உறவினரின் குடும்பம் மூன்று பேரும் என எங்கள் பயணத்தில் மொத்தம் 7 பேர். சென்ற ஆண்டு, நான் மட்டும் ஸ்பிட்டி சமவெளி சென்ற போது பணய ஏற்பாட்டாளர் வழியாக சென்றேன். ஆனால் இந்த முறை அனைத்து ஏற்பாடுகளும் நாங்களே செய்து கொண்டோம். இதில் சாதக பாதகங்கள் உண்டு.   பாதகம் என்றால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும். எந்த கால வரிசையில் எங்கெங்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்து, ஹோட்டல் முன் பதிவு செய்யவேண்டும், பயண வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வேண்டும். எங்கு என்ன சாப்பிடவேண்டும்