Posts

Showing posts from July, 2022

பயணங்கள் தொடர்கின்றன - 8 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) Final - காசா (Kaza) - சந்திரதால் - மணாலி

Image
 ஆறாம் நாள் காலை காசா-வில் இருந்து காலை 9:00 மணிக்குக் கிளம்பிவிட்டோம்.  காஸாவில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் போய் விட்டால் மணாலி வரும்வரை எந்த தொலைபேசி சேவையும் இருக்காது. குறைந்தபட்சம் 27 மணி நேரம் நம்மை யாரும் தொடர்பு கொள்ள முடியாது. முதலில் கீ பௌத்த மடாலயம் (Key Monastery).  ஆயிரம் வருடங்கள் பழமையான ஒன்று. ஸ்பிட்டி சமவெளியில்,  மிகப் பெரிய திறந்த வெளிக்கு நடுவே, சற்றே உயரமான குன்றின் மேல் அமைந்துள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரு castle - போலத் தெரியும். பல்வேறு படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த மடாலயம் .  உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்கும் ஒரு பால் இல்லாத தேநீர் - (cinnamon பட்டை தூக்கலாகப் போட்டு!) கொடுக்கிறார்கள்.  உள்ளே வெளிச்சம் குறைவாக இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது, அதனால் அந்த இடத்துக்குள் மட்டும் நாங்கள் அனுமதிக்கப் படவில்லை. வெளியில் உள்ள நவீன கட்டடங்கள் தவிர உள்ளே இருக்கும் அறைகள் எல்லாம் மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கலாம். உள்ளே துறவிகள் தனியே அமர்ந்து தியானத்தில் ஈடுபடும் இடங்கள் எல்லாம் இன்னும்

பயணங்கள் தொடர்கின்றன - 7 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 4 - காசா (Kaza) - ஹிக்கிம் (Hikkim), லாங்சா (Langza), காமிக்(Komic)

Image
ஐந்தாம் நாள் போகத் திட்டமிட்ட இடங்கள் எல்லாம் காசாவைச் சுற்றியுள்ள இடங்கள்தான். அதிக தூரம் போக வேண்டியதில்லை. கொஞ்சம் நிதானமாகக் கிளம்பலாம். காசா சற்றே பெரிய ஊர். எங்கள் பயணத்தில் கடைசி ATM இங்குதான் உள்ளது. அதிலும் பல நேரங்களில் பணம் தீர்ந்து போய்விடும் என்றார்கள். நாங்கள் பார்க்கும்போதே பணம் எடுப்பதற்குப் பல பேர் வரிசையில் நின்றார்கள். எங்கள் பயண முகவர் சொன்னபடி முதலிலேயே cash எடுத்துச் சென்றுவிட்டோம். காசாவில் மற்றொரு பிரச்சினை Power Failure. எப்போதாவதுதான் சப்ளை இருக்கிறது. அதற்குள் ஹீட்டர் போட்டு குளித்துக் கொள்ளவேண்டும். மொபைல் மற்றும்  பவர் பேங்க்- ஐச் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.  காஸாவில் இருந்து கிளம்பிய பின் இரண்டு நாட்கள் பவர் பேங்க் இல்லாமல் சமாளிக்க முடியாது. காசா வரை ஏர்டெல், ஜியோ இரண்டும் வேலை செய்கின்றன. வோடபோன் முதல் நாளில் இருந்தே வேலை செய்யவில்லை. எங்கள் பயண முகவர் சொன்னது போல நான் கூடுதலாக ஒரு BSNL சிம் வாங்கிக்கொண்டு சென்றேன்.அதன் Voice Network மட்டுமே வேலை செய்கிறது, Data - ம்ஹும் ...சுத்தம்! இன்று முதலில் ஹிக்கிம் - கிராமம். காஸாவில் இருந்து 15 கிமீ மேலே சென்றால

பயணங்கள் தொடர்கின்றன - 6 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 3 - நாக்கோ (Nako) முதல் காசா (Kaza) வரை

Image
நான்காம் நாள் காலை வேனில் கிளம்பும் முன் எங்களை நாக்கோ கிராமத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வரச்சொல்லி விட்டார்கள். அதனால் அதிகாலை 6 மணிக்கே கிளம்பி ஒரு ட்ரெக்கிங், மலை மீது 40 நிமிடம் ஏறினால் ஒரு சிறிய கோவில். அங்கிருந்து பார்க்கும்போது தெரியும் நாக்கோ கிராமம் வேறொரு வகையில் அழகு!  நாக்கோவின் புத்த மடாலயம், நாங்கள் செல்லும்போது திறக்கவில்லை. 7 மணிக்கே souvenir கடை ஒன்றைத் திறந்து வைத்து ஒரு பாட்டியம்மாள் எல்லோரையும் அழைத்துக்கொண்டிருந்தது. மூன்று ஜோடி தொங்கட்டான்களை மொத்தம் 750 ரூபாய் கொடுத்து வாங்கினேன். (வீட்டில் கேட்டால் ஜோடி 60 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார்கள்). ஆனால் இவ்வளவு உயரத்தில், ஆண்டில் 5 மாதம் மட்டும்  சுற்றுலாவை நம்பி இருக்கும் கள்ளமற்ற மனிதர்கள் வாழும் இந்த ஊரில் விலை ஒன்றும் அதிகம் இல்லை என்றுதான் சொல்வேன். இன்றைய திட்டம், நாக்கோவில் இருந்து க்யூ (Gue) , அங்கிருந்து தாபோ (Tabo ), தங்கர் (Dhankar) வழியாக காசா (Kaza) சென்றடைய வேண்டும். இங்கு ஒன்று சொல்லவேண்டும்.... பல தார திருமணத் தடை சட்டம்   அண்ணல் அம்பேத்காரால் 1951-இல் பரிந்துரைக்கப்பட்டது . பெரும் எதிர்ப்பு க