Posts

Showing posts from January, 2023

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

Image
இந்த முறை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லதா (இயற்பெயர் : கனக லதா) எழுதிய சிறுகதைகள் தொகுப்பு "சீனலட்சுமி"  வாங்கினேன்.   நான் அங்கிருந்த  2000- 2008 கால கட்டத்தில், எனக்கு சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அறிமுகமாகி இருக்கவில்லை . அல்லது நானே தொடக்க கால வாசகன்தானே, அதனால் எனக்குத் தெரியவில்லை. லதா ஒரு குறிப்பிடும்படியான தமிழ் எழுத்தாளர் என்பது அவரது கதைகளைப்  படித்த பின்தான் தெரிகிறது. இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது.  இங்கு சில கதைகளை மட்டுமே நான் பேசி இருக்கிறேன். முதல் கதையே உபின் தீவில் (புலாவ் உபின்)  மின்சாரம் வருவதற்கு முன்பிருந்த காலத்து நிலையை சித்தரிக்கிறது.  இன்று ஒருநாள் picnic போகும் இடமாக அறியப்படும் அத்தீவில் தமிழ் குடும்பங்கள் இருந்திருக்கின்றன (இன்னும் இருக்கின்றார்களா?)  என்பதே வியப்பாக இருக்கிறது.  இந்த கதையில் வரும் தாத்தாவை பல பேர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம்.  "இளவெய்யில்" நவீன