Posts

உடுப்பி பயணம்-2

Image
  பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் அதிகாலை நடையை நான் தவற விடுவதில்லை. எப்படிப்பட்ட சாதாரண ஊரானாலும் அதிகாலையில் அது அழகாகத்தான் தோன்றும் என்பது என் கருத்து.  சுற்றுலா என்று வந்து விட்டு  இரவெல்லாம் குடித்துவிட்டு அதிகாலையில் உறங்குபவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் மிக மிகப்  புத்துணர்வான அதிகாலை அனுபவத்தை இழக்கிறார்கள். நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உணவு செய்து கொடுக்கும் வசதியெல்லாம் இல்லை. அதிகாலை நடையுடன் தெருவோர டீக்கடையில்  ஒரு காப்பியும் குடிக்கலாம் என்று நினைத்து நடந்தேன். உடுப்பியில் நான் அப்படி ஒரு டீக்கடையைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மிக அரிதாகத்தான் இருக்கும். உடுப்பி ஊரின் நிலஅமைப்பு கேரளா போலத்தான். அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகள் எல்லாமே தேக்கு,பலா,மா உள்ளிட்ட மரக்கூட்டங்களுக்கு உள்ளே இருக்கின்றன. ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீடுகள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன்.ம்ஹூம் அப்படி எதுவும் தென்படவில்லை. காலை 8 மணிக்கெல்லாம் கார் வந்து விட்டது.  இன்று உடுப்பி உள்ளூர் கடற்கரைகள்தான் செல்லவேண்டும். உடுப்பியில் உ

உடுப்பி பயணம் - 1

Image
நான் 2022 இல் ஸ்பிட்டி சமவெளி போனபோதுதான் நீண்ட விடுமுறை எடுத்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும் இந்தியர்களைப் பார்த்தேன். ஐரோப்பாவில் அது சாதாரணம். மத்திய அரசுப்பணியில் இருக்கும் என் நண்பர் ஆண்டுக்கு மூன்று முறை நீண்ட பயணங்களை மேற்கொள்பவர். அவர் விடுமுறைகளைச் சேமித்து வைப்பதில்லை.வாய்ப்பு கிடைத்தால் வார விடுமுறைகளில் கூட மலையேற்றம் சென்று விடுவார்.  இன்னொருவர் Freelance சாப்ட்வேர் எழுதுபவர். 3 மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறார்.  இது போன்றவர்களை விட மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றுபவர்கள் இன்னும் பயணப் பைத்தியங்கள்.  இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சில பொதுவான பண்புகளைப் பார்த்தேன். அனைவருமே  மிக மிக நேர்த்தியாகத் திட்டமிடுவார்கள், கண்டதையும் சாப்பிட மாட்டார்கள். எதையும் யோசித்துச் செலவு செய்வார்கள். ஆரோக்கியமாக இருப்பார்கள்.  இவர்களுக்கெல்லாம் என்ன கிடைக்கிறது, ஏன் இப்படி ஊர் சுற்றுகிறார்கள் என மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கும்.  எனக்கெல்லாம் ஒரு புதிய ஊரில் நம்மை யாருக்கும் தெரியாது, நமக்கும் யாரையும் தெரியாது. நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள், மதிப்பிட மாட

காஷ்மீர்ப் பயணம்- 5 : பஹல்கம் (Pahalgam) - ஸ்ரீநகர் - குல்மார்க் (Gulmarg)

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர் காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam)           மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே யாசிர் வந்துவிட்டார்.   காலை உணவாக ஆலு பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, Oswal Cottage -இல் இருந்து கிளம்பினோம்.           இந்த இரண்டு நாட்களில் லிதர் ஆற்றில் தண்ணீர்ப் பெருக்கு அதிகரித்திருந்தது. மேலும் கீழே  செல்லச் செல்ல பல கிளை ஆறுகளும், அருவிகளும் சேர்ந்து  தண்ணீர் பெருகி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் Yenner என்ற இடத்தில் நிறுத்தி சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.            இன்று ஸ்ரீநகர் சென்று சில இடங்கள் பார்ப்பதாகத் திட்டம். ஆனால் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை பெய்தால் மொஹல் தோட்டங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு.                நான் ஹஸ்ரத்பால் தர்ஹாவுக்கு செல்லலாம் என்று சொன்னேன். அது 1990-களில் செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெறும் பெயர்.             1993 அக்டோபர் மாதத்தில் ஹஸ்ரத்பால் தர்ஹா-வில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.  அதன

காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam)

Image
காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்      அடுத்த நாள் காலை பஹல்கம் (Pahalgam)  புறப்பட வேண்டும். யாசிர் எங்களிடம் பள்ளிப் பேருந்துகள் வரத் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஆகிவிடும் என்பதால் காலை 7 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும்படி சொன்னார். மே மாதக் கடைசியில் பள்ளிகள் நடக்குமா என்ன ?           காஷ்மீரின்  கல்வியாண்டு இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வேறுபட்டது. அது டிசம்பர் தொடங்கி நவம்பரில் முடியும். ஜனவரிமுதல் மார்ச் வரை மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் காஷ்மீர் மாணவர்களுக்கு அதுதான் விடுமுறைக்காலம். ஏப்ரல் முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கி, நவம்பரில் தேர்வுகள் இருக்கும்.           காஷ்மீரில் மட்டும் தான்  இப்படி. ஜம்முவின் பெரும்பாலான பகுதிகளில் கல்வியாண்டு  ஜூன் தொடங்கி ஏப்ரல் வரை  செயல்படுகிறது.                     அங்கு  பல முறை சமச்சீரான கல்வியாண்டு கொண்டு வருவதற்கு  முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. சமீபத்தில் கவர்னர் அரசு காஷ்மீரின் கல்வியாண்டை ஜூன் முதல் ஏப்ரல் வரை மாற்றி அமைத

காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்

Image
  காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்         காஷ்மீர் செல்வது  பாதுகாப்பானதுதானா  என்று நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.ஸ்ரீநகரில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் குறைந்தபட்சம் ஒரு CRPF - வீரர் கையில் யந்திரத் துப்பாக்கியுடன் நிற்கிறார். நான் பார்த்தவரை எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை.            சினிமாக்களும் ஊடகங்களும் சிறிய விஷயங்களையும் பெரிதுபடுத்துவார்கள். 1980-இன் இறுதிப்பகுதிகள் அல்லது 1990-களின் தொடக்கம் போல இப்போதெல்லாம் இல்லை (ரோஜா திரைப்படம் 1992-இல் வெளியானது).  2008 -ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 60% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.  2009 -இல் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக காஷ்மீர் இருந்திருக்கிறது.            காஷ்மீரில்  கணிசமான மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாவைச் சார்ந்தே  உள்ளது. கொரோனா இவர்களை அதிகமாகப் பாதித்திருக்கிறது.  அவர்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். அவர்கள் வர வேண்டும் என்றால் ஊர் அமைதியானதாக இருக்கவேண்டும்.            இப்போது நீங்கள் YouTube-இல் தேடினால் கூட புதியதாக எத்தனை காஷ்ம