Posts

இசை எங்கிருந்து வருகிறது!

சிங்கப்பூரில் ஒருமுறை எங்கள் client ஒரு சீன சிங்கப்பூரரிடம் நாங்கள் ஒரு கூட்டமாகச்  சேர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 2004 இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருந்தன.பேச்சு இந்தியாவில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பது பற்றி வந்தது.  பொதுவாக மற்ற நாட்டவர்களிடம் தம் நாட்டின் நடைமுறை நிர்வாகச் சிக்கல்களைக் கிண்டலடித்துப் பேசுவது என்றால் இந்தியர்களுக்குக் கொண்டாட்டந்தான். இந்தியத் தேர்தல்களில் அடையாள அட்டை இப்போதுதான் வந்தது என்றும், யார் வேண்டுமானாலும் கள்ள வோட்டுப்  போடலாம் என்றும் நண்பர்கள் அளந்து விட்டுக்கொண்டிருந்தனர். அந்த இள வயது சிங்கப்பூரருக்கு  அடையாள அட்டை இல்லாமல் தேர்தல் நடப்பதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை.   "அது எப்படி ஒரு ஆளை அடையாள அட்டை இல்லாமல் அங்கீகரிப்பது?" நான் கேட்டேன்... "1948 இல் இருந்து உங்கள் ஊரில் தேர்தல் நடக்கிறது, சுதந்திர சிங்கப்பூரில் 1965 இல் இருந்து தேர்தல் நடக்கிறதே, எப்போது அடையாள அட்டை வந்தது ? " "  " "அடையாள அட்டை வருவதற்கு முன் உங்கள் ஊரில் தேர்தல் எப்படி ந

Short or Medium

நீண்ட நாட்கள் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது எனக்கு இருக்கும் பிரச்சினை நல்ல முடி திருத்துநர் கிடைப்பது. உண்மையிலே அது அவ்வளவு எளிதல்ல. சிங்கப்பூரிலும், லண்டன் ஹவுன்ஸ்லோவிலும்  ஒவ்வொருமுறை கடையை விட்டு வெளி வரும்போதும்  திருப்தியே இராது. ஆனால் நான் Watford இல் இருந்தபோது  அந்த கவலை எல்லாம் இல்லை. ஒரு நல்ல தொழில்காரர் எனக்கு அமைந்து விட்டார். Watford -இன்   ஒருபகுதியில்  ஆசியர்கள்  அதிகம் இருக்கிறார்கள். பெரும்பாலும் பாகிஸ்தானியர், படேல்கள் மற்றும்  இலங்கைத் தமிழர்கள்.   விப்பெண்டில் சாலையில்   இருக்கும் அந்த முடி திருத்துநர் ஒரு பாகிஸ்தானி. வயது சுமார் 50 இருக்கும். ஒல்லியான உருவம். நல்ல சிரித்த முகத்துடன் இருப்பார். தொழில் சுத்தம், அதனால் பொறுமையாக வேலை செய்வார். ஆனால் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. நான் போய் உட்கார்ந்த உடனே இந்தியில் பேச ஆரம்பித்து விட்டார். எனக்குத் தெரிந்த ஒரே இந்தி வாக்கியமான "இந்தி நஹி மாலும்" ஐ நான் பதிலாகச் சொன்னேன்.அவரால் எனக்கு இந்தி தெரியாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எப்படி இந்தியாவில் இருந்து இந்தி தெரியாமல் இருக்க முடியும் ?

அண்ணே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !

ஆறுமுகம் புதிதாக எங்கள் வீட்டில் ( ரூமில்) சேர்ந்திருந்தான்.  நான், தனா , கேங்கோ மூன்று பேரும்  இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஹாஸ்டல் இன்னும் கிடைக்கவில்லை. ஆறுமுகம் முதல் வருடம் சேர்ந்திருந்தான்.  கேங்கோவின் மாமாதான் ஆறுமுகத்தை ரூமில் சேர்க்க பரிந்துரைத்திருந்தார் . ஆனால் எங்கள் யாருக்கும் விருப்பமில்லை.எப்படியும் அவன் வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தனியே போய் விடுவான் என்று நாங்கள் நினைக்க, அவனோ  அண்ணன் அண்ணன் என்று எங்கள் மேல் பாசமாக இருந்தான். அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. மேற்கத்திய பாணி கழிப்பறையை முதல் முதலாகப் பார்க்கிறான். (நாங்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தோம்!) "அண்ணே இதில எப்படி ஏறி உக்கார்றது?" கேங்கோ அவனுக்கு ஒரு டெமோ செய்து காட்ட வேண்டியிருந்தது. சிரிக்காமல்  கிண்டல் செய்வதில் தனாவை மிஞ்ச ஆள் இல்லை.அவன் இப்போது, அவனுடைய form -க்கு வந்து விட்டிருந்தான். "அண்ணே இது என்ன Fair & Lovely ? - ன்னு போட்டிருக்கு " " அதுவா அது தலை முடிக்குப் போடறது ?" "அப்படியான்னே?"

இரண்டாம் பரிசும் மூன்றாம் பரிசும்!

அன்று மதிய உணவு இடைவேளையில்தான் கற்பகவிநாயகம் என்னிடம்  வந்து கேட்டான் , நெல்லை அறிவியல் மையத்தில் தமிழ்நாடு வனத்துறை இன்று 2 மணிக்கு   ஒருகட்டுரைப்போட்டி நடத்துகிறது  நீ போக முடியுமா என்று. அவனுக்கே ஜியாலஜி ராமநாதன் சார் அப்போதுதான் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து அவனே சில டிப்ஸ் கொடுத்தான், எந்த தலைப்பு கொடுத்தாலும் வனங்கள் அழிவு, வனத்துறையின் தியாகம் , களக்காடு சிங்கவால் குரங்கு, வல்லநாடு கலைமான் , முண்டந்துறை புலிகள் எல்லாம் கலந்து கட்டி எழுத வேண்டும் என்று. போன பிறகுதான் தெரிந்தது அது மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி என்று . மண்டலம் என்பது பல மாவட்டங்களை உள்ளடக்கியது என்றறிக. நானும்  எழுதி பேப்பரைக் கொடுத்து விட்டு, ஜங்சன் போய் மகாராஜாவில் தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டுவிட்டு வந்ததோடு அதை மறந்துவிட்டேன். அடுத்த வாரம், வழக்கம்போல் சனிக்கிழமை  மதிய உணவுக்குப் பின் காவேரி இல்லம் வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வனத்துறையின் ஜீப் ஒன்று வந்து நின்றது. என் பெயரைச் சொல்லி அந்த டிரைவர் விசாரித்தார் . "இந்த மாதிரி உமக்கு இரண்டாம் பரிசு கிடைச்சிருக்க

விளையும் பயிர் முளையிலே !

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே  எனக்கு NCC இல் சேர வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதற்கு காரணம் அப்போது பள்ளியின் NCC -இல் சார்ஜெண்டாக இருந்த என் சீனியர்  மாணிக்கம்தான். அவருடைய command 'அப்படி' இருக்கும். மாணிக்கம் 'abooooooooout  tErn' சொல்லும்போது வெளியில் நிற்கும் நாமே திரும்பி நிற்க வேண்டும் என்று தோன்றும். command சொல்லி முடித்த பின்பும், சப்தம்  சில நொடிகள் காதில்  கேட்டுக்கொண்டே இருக்கும் (persistence of hearing ?). அதற்குப் பிறகு பள்ளியில் படித்த 6 வருடங்களில், கம்பெனி சார்ஜன்ட் மேஜர் (CSM )டேனியல் பீட்டர்சன் ராஜா மட்டும்தான் அந்த அளவு கமாண்டிங் பவரோடு  இருந்தான். சென்ற வாரம் தற்செயலாகச் சந்தித்த, பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் மாணிக்கத்தின் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர், மாணிக்கத்தின் NCC பிரதாபங்களை நான் சொல்லும்போது வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். "அவர் இப்போ என்ன பண்றாரு தெரியுமா ? "  மாணிக்கத்திற்கு இப்போது 50 வயது இருக்கும். எப்படியும் மேஜர் ஜெனரல் அல்லது லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருப்பார் என்று நினைத்தேன் . ஆனால் சொல்

சர்வ சிக்ஷ அபியானும் ஊறுகாய் மட்டையும் !

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒருமுறை சில  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  பேச்சு தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தைப்பற்றி வந்தது. அப்போது அங்கு ஒரு நண்பரின் நண்பர் கல்வித்துறையில் ஒரு உயர் பதவியில் இருப்பவரும்  இருந்தார். பேச்சு ND சுந்தரவடிவேலு முதல் காமராஜ் கருணாநிதி , MGR , ஜெயா  என்று எல்லோருடைய பங்களிப்புப் பற்றியும் சுற்றி வந்தது. அப்போதுதான்  SSA என்னும் சர்வ சிக்ஷ அபியான் பற்றி பேச்சு வந்தது. அந்த கல்வித் துறை நண்பர் அதனுடைய moto பள்ளிகளுக்கான "availability accessibility affordability" என்றார். கேரளாவும் தமிழ்நாடும் பல ஆண்டுகள் முன்பே இதை அடைந்து விட்டது என்றார்.  மகிழ்ச்சிதான். அதற்குப் பிறகு யோசித்தால் தமிழ் நாட்டில் இது அப்படியே டாஸ்மாக் கடைகளுக்கும் (பீர் மட்டும் கூலிங் இல்லை!) பொருத்தமாக இருக்கிறது..!

சொர்க்கத்தில் சேராது...!

முதலில் சலீம்தான் என்னைப் பார்த்தான். நான் பெங்களூர் போய்விட்டு சென்னை  திரும்பி வரும்போது சாப்பிடுவதற்காகப் பேருந்தை நிறுத்தியிருந்தார்கள். அவன் வேறொரு பேருந்தில் பெங்களூர் போகிறான். சலீம் எனக்கு 2 வருடம் கல்லூரி இளையன். கொஞ்சம் உருளைக்கிழங்கு போல இருந்தாலும் smart ஆக இருப்பான். முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். அவனுக்கும், அவனுடைய வகுப்புத் தோழி சுகுணாவுக்கும் காதல். கல்லூரி நாட்களில்,   அட்மின் பிளாக்-ஐச் சுற்றி வந்தால் எப்படியும் ஒரு முறை இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்து விடலாம். விடுமுறையாக இருந்தால்,இரண்டு பேரும், ஜங்சன் போவதற்கு, திருக்குறுங்குடியிலிருந்து  வரும் பத்தரை மணி  கணபதி பஸ்சைப் பிடித்துவிடுவார்கள். சுகுணாவும் அழகுதான். எனக்குத் தெரிந்து, சலீமைத் தவிர 13 பேர் அவளைக் காதலித்தார்கள்.... ஒருதலையாக, அவளுக்கும் கூடத்  தெரியாமல்! "எப்படி இருக்கீங்க " என் பெயர் அவனுக்கு ஞாபகம் இல்லை என்பது தெரிந்தது.. " நான் நல்லா இருக்கேன் சலீம் .பெங்களூர் site inspection, முடிச்சுட்டு சென்னை போய்க்கிட்டு இருக்கேன், நீ எப்படி இருக்க" "நல்லா