இசை எங்கிருந்து வருகிறது!

சிங்கப்பூரில் ஒருமுறை எங்கள் client ஒரு சீன சிங்கப்பூரரிடம் நாங்கள் ஒரு கூட்டமாகச்  சேர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 2004 இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருந்தன.பேச்சு இந்தியாவில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பது பற்றி வந்தது. 

பொதுவாக மற்ற நாட்டவர்களிடம் தம் நாட்டின் நடைமுறை நிர்வாகச் சிக்கல்களைக் கிண்டலடித்துப் பேசுவது என்றால் இந்தியர்களுக்குக் கொண்டாட்டந்தான். இந்தியத் தேர்தல்களில் அடையாள அட்டை இப்போதுதான் வந்தது என்றும், யார் வேண்டுமானாலும் கள்ள வோட்டுப்  போடலாம் என்றும் நண்பர்கள் அளந்து விட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த இள வயது சிங்கப்பூரருக்கு  அடையாள அட்டை இல்லாமல் தேர்தல் நடப்பதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை.  

"அது எப்படி ஒரு ஆளை அடையாள அட்டை இல்லாமல் அங்கீகரிப்பது?"

நான் கேட்டேன்...

"1948 இல் இருந்து உங்கள் ஊரில் தேர்தல் நடக்கிறது, சுதந்திர சிங்கப்பூரில் 1965 இல் இருந்து தேர்தல் நடக்கிறதே, எப்போது அடையாள அட்டை வந்தது ? "

"  "

"அடையாள அட்டை வருவதற்கு முன் உங்கள் ஊரில் தேர்தல் எப்படி நடந்தது ? "

" "

இந்தக் கேள்வியை அவர் யோசித்தே இருக்க மாட்டார். அவரிடம் பதில் இல்லை.

போட்டோ என்பதே அரிதான காலத்தில், அடையாள அட்டைக்கு எங்கே போவது ? அதற்காக தேர்தல் நடத்தாமல் போக முடியுமா?

"ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பூத் ஏஜென்ட் இருப்பார். அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும், வாக்காளர்களையும்  தெரிந்தவராக இருப்பார். பூத் ஏஜென்ட் கண்காணிப்பில் சாதாரணமாக யாரும் கள்ள வோட்டுப் போட்டுவிட  முடியாது. அப்படியே கள்ள ஓட்டுகள் போடப்பட்டாலும்  மொத்த வாக்குகளைக் கணக்கிடும்போது அது negligible தான்"

நவீன தொழில் நுட்பங்கள் , அவை வருவதற்கு முன்னால் நடைமுறை எப்படி இருந்திருக்கும் என்று சிந்திக்கவிடாது போல. இதுபற்றி நான் என் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன்  சொன்னது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.

இப்போது என்னென்னவோ வகைகளில் இசையைக் கேட்கிறோம். இப்போதிருக்கும் டிஜிட்டலுக்கு முன் இருந்த analog நமக்குத் தெரியும் டேப் ரெக்கார்டர் , LP , கிராமபோன் போல..

ஆனால் அதற்கும்  முன்னால் அரங்கத்தில் போய்தான் இசையைக் கேட்க முடியுமா?  இல்லை, அதற்கும் ஒரு வழி இருந்திருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில்  பேப்பரில் நோட்ஸ் மட்டும்  விற்பார்களாம். அதை வாங்கி வந்து, வீட்டில் நம்முடைய இசைக்கருவியை வைத்து நாமே வாசித்துக்கொள்ள வேண்டுமாம். இசையில் நம்முடைய Active Participation! அமெரிக்காவில் அப்போது Paper Music publishing ஒரு பெரிய வியாபாரமாக இருந்திருக்கிறது. 

எங்கள் வீட்டில் கூட  எங்கள் அம்மா அது போல ஒன்று வைத்திருந்தார். அது சினிமா பாட்டுப் புத்தகத் தொகுப்பு !



Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1