விளையும் பயிர் முளையிலே !

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே  எனக்கு NCC இல் சேர வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதற்கு காரணம் அப்போது பள்ளியின் NCC -இல் சார்ஜெண்டாக இருந்த என் சீனியர்  மாணிக்கம்தான். அவருடைய command 'அப்படி' இருக்கும்.

மாணிக்கம் 'abooooooooout  tErn' சொல்லும்போது வெளியில் நிற்கும் நாமே திரும்பி நிற்க வேண்டும் என்று தோன்றும். command சொல்லி முடித்த பின்பும், சப்தம்  சில நொடிகள் காதில்  கேட்டுக்கொண்டே இருக்கும் (persistence of hearing ?).

அதற்குப் பிறகு பள்ளியில் படித்த 6 வருடங்களில், கம்பெனி சார்ஜன்ட் மேஜர் (CSM )டேனியல் பீட்டர்சன் ராஜா மட்டும்தான் அந்த அளவு கமாண்டிங் பவரோடு  இருந்தான்.

சென்ற வாரம் தற்செயலாகச் சந்தித்த, பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் மாணிக்கத்தின் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர், மாணிக்கத்தின் NCC பிரதாபங்களை நான் சொல்லும்போது வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அவர் இப்போ என்ன பண்றாரு தெரியுமா ? "

 மாணிக்கத்திற்கு இப்போது 50 வயது இருக்கும். எப்படியும் மேஜர் ஜெனரல் அல்லது லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருப்பார் என்று நினைத்தேன் . ஆனால் சொல்லவில்லை


பிறகு அவரே சொன்னார்.

"அவர் 'Buddhist Monk' ஆக இருக்கிறார்"


Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1