Posts

சர்வ சிக்ஷ அபியானும் ஊறுகாய் மட்டையும் !

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒருமுறை சில  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  பேச்சு தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தைப்பற்றி வந்தது. அப்போது அங்கு ஒரு நண்பரின் நண்பர் கல்வித்துறையில் ஒரு உயர் பதவியில் இருப்பவரும்  இருந்தார். பேச்சு ND சுந்தரவடிவேலு முதல் காமராஜ் கருணாநிதி , MGR , ஜெயா  என்று எல்லோருடைய பங்களிப்புப் பற்றியும் சுற்றி வந்தது. அப்போதுதான்  SSA என்னும் சர்வ சிக்ஷ அபியான் பற்றி பேச்சு வந்தது. அந்த கல்வித் துறை நண்பர் அதனுடைய moto பள்ளிகளுக்கான "availability accessibility affordability" என்றார். கேரளாவும் தமிழ்நாடும் பல ஆண்டுகள் முன்பே இதை அடைந்து விட்டது என்றார்.  மகிழ்ச்சிதான். அதற்குப் பிறகு யோசித்தால் தமிழ் நாட்டில் இது அப்படியே டாஸ்மாக் கடைகளுக்கும் (பீர் மட்டும் கூலிங் இல்லை!) பொருத்தமாக இருக்கிறது..!

சொர்க்கத்தில் சேராது...!

முதலில் சலீம்தான் என்னைப் பார்த்தான். நான் பெங்களூர் போய்விட்டு சென்னை  திரும்பி வரும்போது சாப்பிடுவதற்காகப் பேருந்தை நிறுத்தியிருந்தார்கள். அவன் வேறொரு பேருந்தில் பெங்களூர் போகிறான். சலீம் எனக்கு 2 வருடம் கல்லூரி இளையன். கொஞ்சம் உருளைக்கிழங்கு போல இருந்தாலும் smart ஆக இருப்பான். முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். அவனுக்கும், அவனுடைய வகுப்புத் தோழி சுகுணாவுக்கும் காதல். கல்லூரி நாட்களில்,   அட்மின் பிளாக்-ஐச் சுற்றி வந்தால் எப்படியும் ஒரு முறை இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்து விடலாம். விடுமுறையாக இருந்தால்,இரண்டு பேரும், ஜங்சன் போவதற்கு, திருக்குறுங்குடியிலிருந்து  வரும் பத்தரை மணி  கணபதி பஸ்சைப் பிடித்துவிடுவார்கள். சுகுணாவும் அழகுதான். எனக்குத் தெரிந்து, சலீமைத் தவிர 13 பேர் அவளைக் காதலித்தார்கள்.... ஒருதலையாக, அவளுக்கும் கூடத்  தெரியாமல்! "எப்படி இருக்கீங்க " என் பெயர் அவனுக்கு ஞாபகம் இல்லை என்பது தெரிந்தது.. " நான் நல்லா இருக்கேன் சலீம் .பெங்களூர் site inspection, முடிச்சுட்டு சென்னை போய்க்கிட்டு இருக்கேன், நீ எப்படி இருக்க" "நல்லா

யாழ்ப்பயணம்

9 நாட்கள் இனிய  இலங்கைப்பயணத்தில் 1 நாள்தான் யாழ்ப்பாணம். அங்கே பார்ப்பதற்குக் கூட மிக அழகிய இடங்கள் எல்லாம் இல்லை. ஆனால் இன்னமும் யாழ்தான் மனதில் நிரம்பி வழிகிறது. ஏனென்றால் அது மட்டுமே உணர்வு பூர்வமாக அமைந்தது. உடன் வந்த நண்பர்  குடும்பத்தாரின் ஆர்வங்கள் வேறாக இருந்ததால் யாழ்ப்பாணம் வரவில்லை. இரண்டு குடும்பமும் தம்புலா  குகைக் கோயில் பார்த்தபிறகு, அவர்கள் தெற்கே போய்விட, நாங்கள் மட்டும் கிளம்பி அனுராதபுரம் வந்து, யாழ்ப்பாணத்துக்கு தொடர்வண்டி (புகையிரதம்!) பிடித்தோம். மீட்டர் கேஜ் பாதையில் 3 மணி நேரம் பயணம். அனுராதாபுரத்திலிருந்து வடக்கே செல்லும் ரயிலில் பெரும்பாலும் தமிழர்கள்தான் கூட வருகிறார்கள். பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா? அதில் தம்புலா, அனுராதாபுரம் எல்லாம் வருகிறது. அந்த இடங்கள் பற்றி எழுதுவதற்காகவே  1950-களில் கல்கி இலங்கை சென்று திரும்பியிருக்கிறார். லண்டன் ஹவுன்ஸ்லோ ,வெம்பிலி , ஈஸ்ட் ஹாம், சிங்கப்பூர் லிட்டில் இந்தியா எல்லாம் நீங்கள் வெளி நாட்டில் இருப்பதைப்போல ஒரு உணர்வையே கொடுக்கும். ஆனால் வட இலங்கை அப்படி அல்ல. நீங்கள் தமிழ்நாட்டின் உள்ளே ஒரு ஊரில் இருப

யாரைச் சொல்ல ?

சில நாட்களுக்கு முன்பு அலுவலக நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எப்போதும் போல சிலர் பொதுப்புத்தியில் சொன்னார்கள் ... அரசியல்வாதிகள்தான் எல்லா ஊழலும் செய்கிறார்கள் என்று. என்னுடைய கேள்வி, நேரடி அரசியலில் பங்கு பெறாத பொது மக்களுக்கு இதில் பங்கு இல்லையா ? இரண்டு உதாரணங்கள் மட்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எவ்வளவு ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கிறது தெரியுமா ? திமுக ஆட்சியில் முற்றிலும் seniority அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட்டது. இப்போது TRB மூலமாக நிரப்பப்படுகின்றன.இப்போது அரசுப்பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் எந்த ஒரு லஞ்சமும் கொடுக்காமல் வேலைக்கு சேர்த்தவர்கள்தாம். இதைச் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் output எப்படி உள்ளது? அதுபோல குரூப் 4, 2, 1 எல்லாமே நியாயமான தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகின்றன. பெரும்பாலும் நேர்மையாகத் தேர்வு நடப்பதாக அறிகிறேன். ஆனால் நடைமுறை எப்படி இருக்கிறது? எடுத்துக்காட்டாக , முற்றிலும் தங்கள் திறமையைக் காட்டி வேலை வாங்கியவர்கள் ஒற்றை சாரள ம

Hitler and Gandhi

"People sometimes question why on Earth did people not listen to Churchill's warnings about Hitler in the late 1930s," says Charmley, "to which the short answer is that he'd used exactly the same language about Gandhi in the early 1930s."

EV கல்யாணியும் சாரதா சட்டமும்

E.V .கல்யாணி பிரசவ மருத்துவமனை சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் ப்ரெசிடெண்சி ஹோட்டல் பின்புறம் இருக்கிறது. இப்போது சீதாபதி கிளினிக்-இந்த கீழ் செயல்படுகிறது. சென்னையின் மிகச்சிறந்த பிரசவ மருத்துவ மனைகளில் ஒன்று. அதை நிறுவியவர்தான் Dr .E .V . கல்யாணி. அவர் தந்தை E .V .ஸ்ரீனிவாசன் ஒரு கண் மருத்துவர்.  கல்யாணி 1930 களில் MBBS ,MD , DGO  முடித்தார். தமிழ்நாட்டில் அந்த சாதனையைச் செய்த முதல் பெண் அவர்தான்.   40 வருடங்கள் அரசு மருத்துவமனைகளில் வேலை, அதில் கடைசி பத்து வருடங்கள் பேராசியராகவும் வேலை பார்த்த கல்யாணி  சொந்த மருத்துவ மனையைத் தொடங்கினார். 83 வயது வரை சேவை செய்த  அவர் 2001 இல் காலமானார்.  பெரும்பாலும் சுகப்பிரசவங்களுக்கு முயற்சி செய்யும் ஒரு மருத்துவமனை இது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இங்குதான் முதலில் மனைவியின் பிரசவத்தின் போது கணவர் உடன் இருக்கலாம்  என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்க  வேண்டும் . 2011-இல் என் மகள் இன்பா இங்குதான் பிறந்தாள். Dr. E V .கல்யாணி ஒரு Child Widow . டாக்டர் கல்யாணி பற்றி பேச வந்தது எதனால் என்றால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில்

பிரம்ம ரிஷி!

அரசியல் சட்ட வரைவில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.இந்தியர் அனைவருக்கும் சமமான ஓட்டுரிமை (Universal Adult Franchise) என்ற உரிமையை வலியுறுத்திவர்களில் ஒருவர்.   அவரை விக்கிப்பீடியாவில் தேடும்போது அம்பேத்கர் கொடுத்த 'appreciation note' -ஐ குறிப்பிட்டிருக்கிறார்கள் . The main architect of Indian Constitution, Dr. B.R. Ambedkar, who also chaired the constitution's drafting committee, credited Alladi's contribution: “There were in the drafting committee men bigger, better and more competent than myself such as my friend Sir Alladi Krishnaswamy Iyer." "வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப்பட்டம்"