EV கல்யாணியும் சாரதா சட்டமும்

E.V .கல்யாணி பிரசவ மருத்துவமனை சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் ப்ரெசிடெண்சி ஹோட்டல் பின்புறம் இருக்கிறது. இப்போது சீதாபதி கிளினிக்-இந்த கீழ் செயல்படுகிறது. சென்னையின் மிகச்சிறந்த பிரசவ மருத்துவ மனைகளில் ஒன்று. அதை நிறுவியவர்தான் Dr .E .V . கல்யாணி. அவர் தந்தை E .V .ஸ்ரீனிவாசன் ஒரு கண் மருத்துவர். 

கல்யாணி 1930 களில் MBBS ,MD , DGO  முடித்தார். தமிழ்நாட்டில் அந்த சாதனையைச் செய்த முதல் பெண் அவர்தான்.   40 வருடங்கள் அரசு மருத்துவமனைகளில் வேலை, அதில் கடைசி பத்து வருடங்கள் பேராசியராகவும் வேலை பார்த்த கல்யாணி  சொந்த மருத்துவ மனையைத் தொடங்கினார். 83 வயது வரை சேவை செய்த  அவர் 2001 இல் காலமானார்.

 பெரும்பாலும் சுகப்பிரசவங்களுக்கு முயற்சி செய்யும் ஒரு மருத்துவமனை இது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இங்குதான் முதலில் மனைவியின் பிரசவத்தின் போது கணவர் உடன் இருக்கலாம்  என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்க  வேண்டும் . 2011-இல் என் மகள் இன்பா இங்குதான் பிறந்தாள்.

Dr. E V .கல்யாணி ஒரு Child Widow .

டாக்டர் கல்யாணி பற்றி பேச வந்தது எதனால் என்றால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், சமூகத்தின் மிக மிக முன்னேறிய ஒரு சமுதாயத்தில் கூட  குழந்தை திருமணம் இருந்திருக்கிறது. 1856 இலேயே விதவை மறுமணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் நடை முறையில்  விதவை மறுமணம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்திருக்கிறது. 


(From Wikipedia )
According to the 1921 All India Census the details of the child widows reported living in the country that time were as follows:[23]

1 year baby widows - 497
1 to 2 year child widows - 494
2 to 3 year child widows - 1,257
3 to 4 year child widows - 2,837
4 to 5 year child widows - 6,707
Total number of widows - 11,342


1921 இல் ஒரு வயது பெண் குழந்தைகள் கூட  விதவையாக இருந்திருக்கிறன என்ற தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது.

1930 இல் பெண் குழந்தைகளின் திருமண வயது 14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சாரதா சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதை முன்னெடுத்தவர் ஆர்யசமாஜ உறுப்பிரனான ஹர் பிளாஸ் சாரதா. ஆனால் காங்கிரஸில் இருந்த MK ஆச்சார்யர் போன்ற  வைதீகர்கள் குழந்தைத் திருமணம் தொடர  வேண்டும் என்று வாதிடுகின்றனர். குழந்தைத் திருமணம் இல்லை என்றால் கற்பு நெறி கெட்டுவிடும் (!), பெண்கள் ஒழுக்கம் தவறி விடுவார்கள்(!) என்பது அவர்கள் வாதம். 

 குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கும்  MK ஆச்சார்யாரைக்   கடுமையாக சாடுகிறார்  பெரியார்.அதே சமயம், தமிழ்நாட்டில் 1929 இல் விதவா விவாஹ சகாய சபை (What a name !) என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில்பெரியார்  விதவைகள் மறுமணத்தை ஆதரித்துப் பேசுகிறார். 1930 இல் விதவைத் திருமணங்களை நடத்தத் தொடங்குகின்றார். அந்தக் காலத்தில் இது சாதாரண விஷயம் அல்ல.சிறிது  சிறிதாக சூழல் மாறுகிறது..


1932 இல் EV கல்யாணி (24 வயதில்) MBBS முடிக்கிறார். 

கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில், TV சுந்தரம் ஐயங்கார் இள வயதில் விதவையான தன் மகள் சௌந்தரத்திற்கு, காந்தியின் கட்டாயத்தின் பேரில் மறுமணம் செய்து வைக்கிறார்.

தன் மகளைப் படிக்க அனுப்பிய Dr .ஸ்ரீனிவாசனால், அவருக்கு மறுமணம் செய்து வைத்திருக்க முடியாதா என்றுதான் முதலில் எனக்குத்  தோன்றியது..!!  


  

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1