யாரைச் சொல்ல ?

சில நாட்களுக்கு முன்பு அலுவலக நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எப்போதும் போல சிலர் பொதுப்புத்தியில் சொன்னார்கள் ... அரசியல்வாதிகள்தான் எல்லா ஊழலும் செய்கிறார்கள் என்று.
என்னுடைய கேள்வி, நேரடி அரசியலில் பங்கு பெறாத பொது மக்களுக்கு இதில் பங்கு இல்லையா ? இரண்டு உதாரணங்கள் மட்டும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எவ்வளவு ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கிறது தெரியுமா ? திமுக ஆட்சியில் முற்றிலும் seniority அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட்டது. இப்போது TRB மூலமாகநிரப்பப்படுகின்றன.இப்போது அரசுப்பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் எந்த ஒரு லஞ்சமும் கொடுக்காமல் வேலைக்கு சேர்த்தவர்கள்தாம். இதைச் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள்தான்.
ஆனால் ஒட்டுமொத்தமாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் output எப்படி உள்ளது?
அதுபோல குரூப் 4, 2, 1 எல்லாமே நியாயமான தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகின்றன. பெரும்பாலும் நேர்மையாகத் தேர்வு நடப்பதாக அறிகிறேன். ஆனால் நடைமுறை எப்படி இருக்கிறது?
எடுத்துக்காட்டாக , முற்றிலும் தங்கள் திறமையைக் காட்டி வேலை வாங்கியவர்கள் ஒற்றை சாரள முறையில் நிரப்பப்படும் குரூப் 2 இடங்களில் முதலில் தேர்ந்தெடுப்பது Sub Registrar பதவிதான், அதற்கு அடுத்து நிரம்புவது DCTO (Deputy Commercial Tax Officer )பதவி. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
நாம் யாரைக் குறை சொல்கிறோம் ?

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1