Posts

Ayyappanum Koshiyum

Image
We watched the movie Ayyapanum Koshiyum yesterday. Though the movie is about 3 hours long, it is convincingly engaging the audience. We indeed never did any "pause" in between when watching it in Prime Video. People around Koshi are creating new problems and pulling him back whenever Koshi realizes his mistakes and tries to move forward. One open dialogue between A&K itself would have stopped the story to end before "interval". The entire storyline is how ego generates never-ending complications in people’s lives. I am not going to talk about the movie, but about a scene in the movie. The lady constable Jessie is crying at the police station after watching the breaking news on TV. At that time, when Ayyappan Nair says "You are in uniform, stand upright", she replies "After wearing this uniform only, I started to stand upright Sir ". It just reminded me of something. We went to Kannur as a group tour during the last Christmas holi

பயணங்கள் தொடர்கின்றன - 3 : தஞ்சை

Image
இரண்டு நாட்கள் தஞ்சை மாவட்ட பயணம் . ஆ.. ஊ என்று தஞ்சை பெரியகோவிலைப் பற்றி பீலா விடும் யுடியூப் வீடியோக்கள் என்னை எப்போதும் ஈர்த்ததில்லை. சமஸ் எழுதிய 'சாப்பாட்டு புராணம்' புத்தகம்தான் எனக்கு இந்த பயண ஆர்வத்தை  ஏற்படுத்தி இருந்தது. ஒரு Culinary Tour  போவதற்காகவே பலமுறை  திட்டமிட்டும் கூட  போக முடியாமல் தடை பட்டிருந்த இடம் இது.  ஆதலால்   இந்த முறையும், நம்பிக்கை இல்லாமல்தான் பயணச்சீட்டை ரயிலில் முன் பதிவு செய்திருந்தேன். பொதுவாக நாங்கள் எங்கள் பயணத் திட்டங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தையும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவோம். ஆனால் இந்த முறை 2 நாட்கள் முன்பு வரை ஹோட்டல் முன் பதிவு செய்யவில்லை. , போகும் இடம், நேரம்  எதுவென்று எல்லாம் முடிவு செய்யவே இல்லை.  எல்லாமே கடைசி நேர முடிவுகள்தான். ஆனாலும் இந்தப் பயணம் மனம் நிறைவாக இருந்தது. ஒரு முக்கியமான விஷயம்,  தஞ்சை மாவட்ட கோவில்களைப் பார்க்க வேண்டும் என்றால், தங்குவதற்கு சரியான இடம் கும்பகோணம்தான். பல கோவில்கள் 30-40 கிமீ சுற்றளவுக்குள் வந்துவிடும். நாங்கள் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை ஐந்தரை மணிக்கே கும்பகோணம்

செவ்வியல் இசையும் சிக்கன் புரோட்டாவும் ..

போன வாரத்துக்கு முந்தைய வாரம் கிருஷ்ண கான சபாவில் ரவிக்கிரன் கச்சேரி. செவிக்கு உணவு இல்லாத போழ்து தானே வயிற்றுக்கும் ..! கச்சேரிக்கு பின் பார்டர் ரஹமத் கடையில் நல்லெண்ணெயில் பொரித்த நாட்டுக் கோழியுடன் பரோட்டா. போனவாரம் வாணி மஹாலில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரி. அதன் பிறகு இரவு உணவுக்கு வைர மாளிகை. தேங்காய் எண்ணெயில் பொரித்த நாட்டுக்கோழியுடன் பரோட்டா. இன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் தமிழ் கச்சேரி. மகிழ்நனும் என்னுடன் வர வேண்டும் என்று நிற்கிறான். அவனுடைய தமிழார்வத்தையும் கர்நாடக இசை ஆர்வத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!

பயணங்கள் தொடர்கின்றன -2 : மன்றோ தீவு

Image
நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எங்களை பள்ளியிலிருந்து வெளியில் அழைத்துச் சென்றார்கள்.எதற்கு தெரியுமா? வைகை ஆற்றில் வெள்ளம் வருவதை பார்ப்பதற்காக! பல ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இருகரையும் தொட்டு வெள்ளம் செல்லும் எங்கள் ஊரின் ஆறு அது! இந்த மாதம் கூட 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் வைகையின்  இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது. வைகையையே பார்த்து வளர்ந்ததால்தானோ என்னவோ தண்ணீர் தேசங்கள் என்னை பிரமிக்க வைக்கிறது! அரிப்பாவில் இருந்து கிளம்பி நாங்கள் குளத்துப்புழா வழியாக  மன்றோ தீவு சென்றடைந்தோம். மன்றோ தீவு முதலில் எங்கள் பயணத்திட்டத்தில் இல்லை. நாங்கள் கொல்லத்தைச் சுற்றியுள்ள இடங்களைத் தேடும்போது, எங்களுக்குச் சிக்கியது. எவ்வளவு அழகான இடம் இது! அதிகம் சந்தைப்படுத்தப் படாமல் உள்ளது!  கொல்லத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மன்றோ தீவு உள்நாட்டில் அமைந்த ஒரு தீவாகும் (Inland island ).கல்லடா ஆற்றுக்கும் அஷ்டமுடி ஏரி க்கும் நடுவில் அது அமைந்துள்ளது. 10,000 மக்கள் வசிக்கிறார்கள்.இது ஒரு தீவு என்று மற்றவர்கள் சொன்னால் தான் நமக்குத் தெரியும் மற்றபடி இது m

பயணங்கள் தொடர்கின்றன -1 : அரிப்பா

Image
விடுமுறைப் பயணத்திற்காக மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கவி (Gavi) ஐ நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். அதைத் தேடும்போதுதான் Arippa Ecotourism Village பற்றித் தெரிய வந்தது. Arippa Ecotourism, KFDC என்னும்  கேரள வன வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படுவது. செங்கோட்டை, கொல்லம் ,திருவனந்தபுரம் ஆகிய மூன்று இடங்களில் எங்கிருந்து வந்தாலும், கிட்டத்தட்ட சம தூரத்தில், அதாவது  50-60 கிலோ மீட்டர் தூரத்தில் அரிப்பா உள்ளது. இந்த முறை பள்ளியில் இரண்டு பருவங்கள்தான்.அதனால் நவம்பரில்  மூன்று வாரம் விடுமுறை. நாங்கள் நவம்பர் 2ஆம்தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரெஸ்ஸில்  கிளம்பி கொல்லத்தில் இறங்கிக்கொண்டோம். நண்பர் ஒருவர் கொல்லத்தில் இருந்து கார் ஒன்றை ட்ராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். கொல்லத்தில் விஜய் 'அண்ணா'வுக்கு, அவரது ரசிகர்கள்  175 அடி உயரத்தில் கட் -அவுட் வைத்திருந்தார்கள். டிரைவர் சஜய் அதிகம் பேசவில்லை. ஆனால், அரசியலைப் பேச ஆரம்பித்தால் மலையாளிகள் பற்றிக்கொள்ளவார்கள் அல்லவா? "இப்போ எப்படியிருக்கு, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கு

பட்டப்பெயர்கள்!

அந்த பெரியண்ணன்தான் ,  'டேய் சங்கர்,  கரடியை நான் கூப்பிட்டேன்னு கூப்பிடுடா' என்று சொன்னான்.  எனக்கு கரடியைத் தெரியும், அடுத்த தெருப்பையன். என்னுடைய வயதுதான். உடம்பெல்லாம் முடியாக இருப்பான். 'கரடி, உன்னை குணா அண்ணன் கூப்பிடுது'.  அவன் கோபத்துடன் இடது கையால்  என்னை ஓங்கி  அறைந்து விட்டு குணாவைப் பார்க்க ஓடிவிட்டான். கன்னத்தைத் தடவிக்கொண்டு, நான் விசாரித்ததில் யாருக்கும்  கரடியின் உண்மையான பெயர் தெரியவில்லை. பிறகு, எங்கள் ஆச்சிதான் அவன் அம்மாவிடம் விசாரித்து விட்டுச் சொன்னாள் அவன் பெயர் சுந்தர் ராஜன் என்று. பட்டப்பெயர்கள் வைப்பது இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. இருந்தாலும் பெரிதாக வெளியே தெரிவதில்லை போலும். ஆனால் நாங்கள் படிக்கும்போது நிறையப் பேருக்குப் பட்டப்பெயர் இருக்கும். அதற்கு முன் இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். கல்வி பரவலான பிறகு, பட்டப்பெயர்கள் குறைந்து விட்டனவா? அது என்னவோ தெரியவில்லை,  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் எல்லாமே மொன்னையாக, சுவாரஸ்யம் இல்லாமலே இருக்கும். சில ஆசிரியர்கள் தேர்வில் பெயில் ஆகி இரண்டாம் வருடம

காந்தியும் சர்ச்சிலும் !

காந்தி இர்வின் ஒப்பந்தம் பற்றி விக்கிப்பீடியாவில் தேடிக்கொண்டிருந்தேன். 1931 மார்ச் மாதம் கையெழுத்தான அந்த  ஒப்பந்தம் பெரும்பாலான ஆங்கிலேயர்களுக்குப்  பிடிக்கவில்லை. " Be hard on the problem, soft on the people" என்று நிர்வாகவியலில் சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் சர்ச்சிலோ பிரச்சினைகளைப் பேசுவதைவிட காந்தியை வசைபாடுவதில்தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்.அதிலும் என்ன ஆணவம்! Many British officials in India, and in England, were outraged by the idea of a pact with a party whose avowed purpose was the destruction of the British Raj. Winston Churchill publicly expressed his disgust "...at the nauseating and humiliating spectacle of this one-time Inner Temple lawyer, now seditious fakir , striding half-naked up the steps of the Viceroy’s palace, there to negotiate and parley on equal terms with the representative of the King Emperor." அதைத்தொடர்ந்து, செப்டம்பரில் நடந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள வரும்போது, காந்தி மன்னரைச் சந்திக்கிறார். வைஸ்ராய் என்