செவ்வியல் இசையும் சிக்கன் புரோட்டாவும் ..

போன வாரத்துக்கு முந்தைய வாரம் கிருஷ்ண கான சபாவில் ரவிக்கிரன் கச்சேரி.
செவிக்கு உணவு இல்லாத போழ்து தானே வயிற்றுக்கும் ..!
கச்சேரிக்கு பின் பார்டர் ரஹமத் கடையில் நல்லெண்ணெயில் பொரித்த நாட்டுக் கோழியுடன் பரோட்டா.
போனவாரம் வாணி மஹாலில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரி. அதன் பிறகு இரவு உணவுக்கு வைர மாளிகை. தேங்காய் எண்ணெயில் பொரித்த நாட்டுக்கோழியுடன் பரோட்டா.
இன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் தமிழ் கச்சேரி. மகிழ்நனும் என்னுடன் வர வேண்டும் என்று நிற்கிறான்.
அவனுடைய தமிழார்வத்தையும் கர்நாடக இசை ஆர்வத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!

Comments

  1. #அவனுடைய தமிழார்வத்தையும் கர்நாடக இசை ஆர்வத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது# - அருமையான முத்தாய்ப்பு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - Dri Valley