Posts

Showing posts from December, 2025

சின்ரனின் "வாக்குறுதி"

Image
               நெடு நாட்களுக்கு முன் பரிசாகக் கிடைத்த புத்தகம் "வாக்குறுதி". படிக்கப்படாமலேயே இருந்தது, ஆனால் தொடங்கியவுடன் பற்றிக்கொண்டு விட்டது.        பிரிட்டிஷ் சீன பெண் எழுத்தாளர் சின்ரன், சீனாவின் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்களை நேர்காணல் செய்து எழுதிய புத்தகம்தான் "வாக்குறுதி". நேர்காணலுக்கான உட்கரு அவர்களின் காதல் வாழ்வு.      மிகச் சுருக்கமான கேள்விகளுக்கு கிடைக்கும் விரிவான அனுபவங்களின் பதிவு  கிட்டத்தட்ட ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.      தொடக்கத்தில் எண்பது வயது கடந்த, 63 வருடங்கள் திருமண வாழ்வை நிறைவு செய்த முதியவள் ஒருத்தி தன் கணவன் இறந்த பின் கன்னிமைப் பரிசோதனை செய்து கொள்கிறாள்.  அதிர்ச்சி அளிக்கும் அந்தப் பரிசோதனையின் முடிவே இந்த நூல் நம்மை உள்ளிழுத்துக் கொள்ள போதுமானது.      இப்பெண்கள் பேசுவது என்னவோ தங்கள் காதல் அல்லது திருமண வாழ்வு பற்றித்தான். ஆனால் அதனுடன் சேர்ந்து, அதன் பின்னால் விரிவது சீனாவின் நூற்றாண்டு அர...