ஏப்பே, இந்த ஊருக்கு எந்த பஸ்ஸுப்பே போகும்?

 

2015 இல் பின்லாந்து விசாவுக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது..விசா நேர்காணல் திங்கட்கிழமை காலை என்பதால் நான் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் எடுத்து டெல்லி போய்விட்டேன். அங்கிருந்து பிவாடி -யில் இருக்கும் என் கல்லூரி நண்பனைப் பார்க்கப் போகலாம் என்று ஒரு எண்ணம்.

பிவாடி டெல்லியில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. அளவில் நம் ஊர் கோவில்பட்டியை விட சற்றே பெரியஊரான இது ராஜஸ்தானின் ஒரு முக்கியத் தொழில்மையமாகும்.

டெல்லி விமான நிலையத்தில் இறங்கி பிவாடி போக வேண்டும் என்றால், ஒரே வழி டாக்ஸிதான் என்று சொல்கிறார்கள். டாக்ஸி கட்டணம்  3000 ரூபாய் கேட்கிறார்கள். பொதுப்போக்குவரது பற்றி விசாரித்தால் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள்!

 இது 2015 இன் நிலை  என்றால், 2020 இல் மட்டும் பெரிதாக முன்னேறிவிடவில்லை.  நிலை என்னவென்று கீழ்க்கண்ட படத்தைப்பார்க்கலாம் அதாவது, புது டெல்லி சென்று, அங்கிருந்து ஹூடா சிட்டி சென்டர் - மெட்ரோலில் பயணித்து, அங்கிருந்து 45 கி.மீ தூரம் நாம் டாக்ஸியில் செல்லவேண்டும். கிட்டத்தட்ட ரூபாய் 1200/- ஒரு ஆளுக்கு.





 இந்தியாவின் தலை நகரில் இருந்து அண்டை மாநிலத்தின் முக்கியமான தொழில் நகரத்துக்கு உள்ள பொதுப்போக்குவரது வசதியின் நிலை  இதுதான்!

சரி, தமிழ் நாட்டின் நிலை எப்படி?

இப்போது வேண்டாம், 1980-களில்  நமது தீப்பட்டி நகரமான கோவில்பட்டியை எடுத்துக்கொள்வோம். எந்த திசையில் இருந்தும் கோவில்பட்டிக்கு வந்து சென்று கொண்டிருந்த பேருந்துகளின் கணக்கை எடுத்துப்பாருங்கள். எவ்வளவு குறைந்த கட்டணத்தில், எவ்வளவு விரைவாக, ஒரு சாதாரணக் குடிமகன் அந்த ஊரை சென்று சேர்ந்து விடமுடியும் என்று!.

அப்போதும் கூட , mofussil bus மட்டுமல்ல அல்ல, மதுரை-திருமங்கலம்-விருதுநகர்-சாத்தூர்-கோவிப்பட்டி என்று நகரப்பேருந்துகள் கூட தொடர்ச்சியாக உண்டு. இது தமிழ்நாட்டில் 40 வருடங்களுக்கு முன்பிருந்த connectivity. (அதற்கும் முன்பிருந்தே இருக்கவேண்டும்).இந்த வகையான போக்குவரத்து வசதிகளை நீங்கள் மேற்கு ஐரோப்பாவுடனும்  ஸ்கேண்டிநாவிய நாடுகளுடனும் மட்டும்தான் ஒப்பிட முடியும், இந்தியாவின் எந்த மாநிலங்களோடும் அல்ல!

இதன் காரணமாகத்தான், இலவச பஸ் பாஸ் திட்டம், பல மாணவர்களை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை நோக்கி அழைத்துச் சென்றது.

 குறிப்பு: தமிழ்நாட்டில் 1972 - தி.மு.க ஆட்சி காலத்தில் பயணிகள் போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்டது! 1990-91 ஆம் கல்வியாண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது!

எப்போதாவது உங்களிடம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று யாராவது சொன்னால், நீங்கள் எங்கே வீழ்ந்தோம், எப்போது வீழ்ந்தோம் என்று ஆதாரத்துடன் திருப்பிக்கேளுங்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1