Posts

சின்ரனின் "வாக்குறுதி"

Image
               நெடு நாட்களுக்கு முன் பரிசாகக் கிடைத்த புத்தகம் "வாக்குறுதி". படிக்கப்படாமலேயே இருந்தது, ஆனால் தொடங்கியவுடன் பற்றிக்கொண்டு விட்டது.        பிரிட்டிஷ் சீன பெண் எழுத்தாளர் சின்ரன், சீனாவின் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்களை நேர்காணல் செய்து எழுதிய புத்தகம்தான் "வாக்குறுதி". நேர்காணலுக்கான உட்கரு அவர்களின் காதல் வாழ்வு.      மிகச் சுருக்கமான கேள்விகளுக்கு கிடைக்கும் விரிவான அனுபவங்களின் பதிவு  கிட்டத்தட்ட ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.      தொடக்கத்தில் எண்பது வயது கடந்த, 63 வருடங்கள் திருமண வாழ்வை நிறைவு செய்த முதியவள் ஒருத்தி தன் கணவன் இறந்த பின் கன்னிமைப் பரிசோதனை செய்து கொள்கிறாள்.  அதிர்ச்சி அளிக்கும் அந்தப் பரிசோதனையின் முடிவே இந்த நூல் நம்மை உள்ளிழுத்துக் கொள்ள போதுமானது.      இப்பெண்கள் பேசுவது என்னவோ தங்கள் காதல் அல்லது திருமண வாழ்வு பற்றித்தான். ஆனால் அதனுடன் சேர்ந்து, அதன் பின்னால் விரிவது சீனாவின் நூற்றாண்டு அர...

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - நிறைவுப் பகுதி

Image
          நண்பர்களில் பலர் என்னிடம் இப்படி பயணங்கள் செல்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்கிறார்கள்.  எப்போதுமே நம்மிடம் இருக்கும் பட்ஜெட்டில் எங்கு போகமுடியுமோ அங்கு போகலாம்.  ஆனால் பெரிய பயணங்களுக்கு முக்கியமாக வேண்டியது உடல் தகுதி.  ஒவ்வொரு அடுத்த பயணத்திலும் நம் வயது கூடிக்கொண்டே செல்கிறது என்பதை உடல் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்,  முக்கியமாக முழங்கால்களும் , கீழ் முதுகும்.           உதாரணமாக என்னால் மேகாலயாவில் இருக்கும் Double Decker Living  Root Bridge -க்கு போய்வர முடியும் என்று தோன்றவில்லை. கடினமான பாதை, 3500 -க்கும் மேற்பட்ட படிகள். அதெற்கெல்லாம் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் 35 வயதுக்கு முன் அல்லது உடல் எடை குறைவாக இருக்கும்போதே சென்றுவிட வேண்டும்.      இனி.. மறுநாள் காலையில் யாரும் குளித்தது போல் தெரியவில்லை. மின்சாரம் வேறு இல்லை. over head tank -இல் இருக்கின்ற தண்ணீரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  மழை விட்டு விட்டு பெய்து கொண்டேதான்...

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - Dri Valley

Image
                    மறுநாள் காலை நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு எங்கள் உடமைகளை எல்லாம் தயாராக வைத்திருந்தோம்.          அணினியில் இருக்கும் வரைதான்  ஏர்டெல் வேலை செய்யும். இன்னும் சில கிலோமீட்டர் நகர்ந்தாலே, தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுவோம்.  என்னுடைய இரண்டு சிம் கார்டுகளும்  (ஒன்று ஜியோ, இன்னொன்று வோடபோன்) இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்பில் இல்லை. நானே ஒவ்வொரு முறையும் பிறரிடம் கொஞ்சம் hotsopt பிச்சை எடுத்துத்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் கிளம்பும் காலையில் அணினியிலேயே ஏர்டெல்லும் முற்றிலும் செயலிழந்தது. இன்று முதல் மூன்று நாட்கள் எந்த நெட்ஒர்க்கும் வேலை செய்யாது.              இன்று Dri Valley செல்லும் வழியில் கிப்புளின் (Gipuline) என்ற கிராமம் உள்ளது. போகும் வழியில் ஒரு Detour ஆக அந்த இது-மிஷ்மி இனத்தில் ஒரு முக்கியஸ்தரின் வீடு ஒன்றிற்கு செல்லும் திட்டம் இருந்தது.  அந்த வீட்டில் உள்ள சுவாரஸ்யங்களை விட, அதற்குப்...

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - அணினி உள்ளூர்

Image
        சில நாட்களுக்கு முன் என்னுடைய ஆபீஸ் சீனியர் ஒருவர் என்னுடைய பயணத்தைப் பற்றி விசாரித்தார். அவரது எண்ணம் இப்படி என்னைப்போல் பயணிப்பதற்கு   பணம் செலவழிப்பது சரியல்ல என்பது. பலரது எண்ணமும் அதுதான். நான் என்னுடைய பட்ஜெட்-க்குள் மட்டுமே எண்ணி எண்ணி செலவழிக்கிறேன் என்றாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.            அவரிடம் பேசியபின்தான் உண்மையில் நான் கொஞ்சம் பணத்தை புதிய அனுபவமாகவும் , மகிழ்ச்சி நிறைந்த   நினைவுகளாகவும் பரிமாற்றி வைத்துக் கொள்கிறேன் என்று எனக்கே புரிந்தது.            மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்ட பின்,  நடந்தே சென்றோம் , மொத்த அணினி நகரத்தையும் மேலே இருந்து பார்க்க. என்ன மொத்த நகரம் ( மக்கட் தொகை 2000 பேர்! 6 தெருக்கள், மிஞ்சிப்போனால் 500 வீடுகள்!! ).            இன்று எங்கள் டிரைவர் ஆஷிக்கிற்கு கொஞ்சம் ஓய்வு. எங்களுடன் அணினியில் chalohoppo -வின் உள்ளூர் பிரதிநிதியாக அமிஷியும் சேர்ந்துகொண்டாள். நாங்கள் அணினியிலிருந்...

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை

Image
     நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி இமய மலைக்கு செல்லும் பழக்கமுடையவர் . முன்பெல்லாம் இவர் ஒரு ஸ்டண்ட் -க்குக்காக செய்கிறார்  என்றே நினைத்திருந்தேன். ஆனால், முதல் முறை இமயத்தைப் பார்த்தபின்,  என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இன்று வரை இமயம் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.  அப்பெரிய இயற்கையின் முன் ஆணவம் அழிந்து நான் சிறு துளியாய் உணர்கிறேன்.       இந்த முறை இப்பயணம் பெரிதும் திட்டமிடப் படாதது.  அலுவலகத்தில் இரண்டு ப்ராஜெக்ட்-களுக்கு இடையில் ஒரு சிறு இடைவெளி கிடைத்தது. மேலும், விடுமுறையும் இருக்கிறது என்பதால் ஒரு தனிப் பயணம். தேதிகள் சரியாகப் பொருந்தியதால்தான் நான் இந்த இடத்தை தேர்வு செய்தேன்.  அது தவிர உண்மையிலேயே அணினி பற்றி இந்த பயணத்தின் போதுதான் தெரிந்துகொண்டேன்.           அருணாச்சலில் மூன்று மலை நகரங்கள் முக்கியமானவை . ஒன்று எல்லோருக்கும் தெரிந்த தவாங் (Tawang). இதுதான் சீனாவுடன் பிரச்சனையில் இருக்கும் பகுதி. இது வடமேற்கு அருணாச்சலில் உள்ளது. அடுத்து வடக்கு  மத்தியில் உள்ள மேச்சுக்கா (Mech...