கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை
நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி இமய மலைக்கு செல்லும் பழக்கமுடையவர் . முன்பெல்லாம் இவர் ஒரு ஸ்டண்ட் -க்குக்காக செய்கிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால், முதல் முறை இமயத்தைப் பார்த்தபின், என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இன்று வரை இமயம் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. அப்பெரிய இயற்கையின் முன் ஆணவம் அழிந்து நான் சிறு துளியாய் உணர்கிறேன். இந்த முறை இப்பயணம் பெரிதும் திட்டமிடப் படாதது. அலுவலகத்தில் இரண்டு ப்ராஜெக்ட்-களுக்கு இடையில் ஒரு சிறு இடைவெளி கிடைத்தது. மேலும், விடுமுறையும் இருக்கிறது என்பதால் ஒரு தனிப் பயணம். தேதிகள் சரியாகப் பொருந்தியதால்தான் நான் இந்த இடத்தை தேர்வு செய்தேன். அது தவிர உண்மையிலேயே அணினி பற்றி இந்த பயணத்தின் போதுதான் தெரிந்துகொண்டேன். அருணாச்சலில் மூன்று மலை நகரங்கள் முக்கியமானவை . ஒன்று எல்லோருக்கும் தெரிந்த தவாங் (Tawang). இதுதான் சீனாவுடன் பிரச்சனையில் இருக்கும் பகுதி. இது வடமேற்கு அருணாச்சலில் உள்ளது. அடுத்து வடக்கு மத்தியில் உள்ள மேச்சுக்கா (Mech...