கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - நிறைவுப் பகுதி
நண்பர்களில் பலர் என்னிடம் இப்படி பயணங்கள் செல்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்கிறார்கள். எப்போதுமே நம்மிடம் இருக்கும் பட்ஜெட்டில் எங்கு போகமுடியுமோ அங்கு போகலாம். ஆனால் பெரிய பயணங்களுக்கு முக்கியமாக வேண்டியது உடல் தகுதி. ஒவ்வொரு அடுத்த பயணத்திலும் நம் வயது கூடிக்கொண்டே செல்கிறது என்பதை உடல் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும், முக்கியமாக முழங்கால்களும் , கீழ் முதுகும். உதாரணமாக என்னால் மேகாலயாவில் இருக்கும் Double Decker Living Root Bridge -க்கு போய்வர முடியும் என்று தோன்றவில்லை. கடினமான பாதை, 3500 -க்கும் மேற்பட்ட படிகள். அதெற்கெல்லாம் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் 35 வயதுக்கு முன் அல்லது உடல் எடை குறைவாக இருக்கும்போதே சென்றுவிட வேண்டும். இனி.. மறுநாள் காலையில் யாரும் குளித்தது போல் தெரியவில்லை. மின்சாரம் வேறு இல்லை. over head tank -இல் இருக்கின்ற தண்ணீரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மழை விட்டு விட்டு பெய்து கொண்டேதான் இருந்தது. காலையில் உணவை முடித்த பின் முதலில் சென்றது மாவு (Mawu) அருவி. அதுவும் ப்ரூனி செல்லும் வழியி