வியட்நாம் பயணம் - மீண்டும் Ha Noi - நிறைவுப் பகுதி
Ha Noi - இல் மீண்டும் அதே Homestay. சென்னையில் இருந்து கிளம்பி இன்று ஒன்பதாம் நாள். வியட்நாமின் வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சமேனும் பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்றுதான் Hoa Lo சிறையின் மியூசியம் சென்றோம். பிரெஞ்சு காலனி காலகட்டத்தில் கட்டப்பட்டது இந்த சிறை. விடுதலைக்காகப் போராடியவர்களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு அடைக்கப்பட்ட இடம். ஆண் கைதிகள் எந்நேரமும் கால்களை நீட்டி பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். சிறிய சிறைதான் இது, சில நேரங்களில் மிக அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 1908 இல் நிகழ்ந்த Hanoi Poison Plot - என்பது விடுதலைப் போராட்டக்குழுவின் ஒரு முக்கியமான ஒரு சதித் திட்டம். சமையல்காரர்கள் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு சிப்பாய்களின் உணவில் விஷம் கலந்து கொன்று ஒரு கோட்டையைக் கைப்பற்றும் முயற்சி. இரண்டு வகையில் அது தோல்வியில் முடிந்தது. ஒன்று, கலக்கப்பட்ட விஷம் சிப்பாய்களைக் கொல்லவில்லை, இரண்டு குற்றவுணர்வு கொண்ட ஒரு சமையல்காரர், தேவாலய பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கோரியதால் - ரகசியம் உடனடியாக பிரெஞ்சு அதிகா