Posts

வியட்நாம் பயணம் - Ha Long Bay

Image
                      Nin Binh  போலவே  Ha Long Bay-க்கும் , தொகுப்பு பயணம் என்றால் Old Quarters லிருக்கும் விடுதி வாசலிலேயே வந்து அழைத்துச் செல்கிறார்கள்.  8 மணிக்கு கிளம்பினால் Ha Long Bay - படகுத்துறையில்  11 மணி போல இறக்கி விடுகிறார்கள்.                      இந்தியர்கள் என்றால் எல்லாமே சைவமாக இருப்பார்கள் என்று ஒரு புரளியை வடக்கிந்தியர்கள் உருவாக்கி விட்டார்கள் போல. check-in சோதனையின் போதுதான் கவனித்தோம்.  எங்கள் உணவுத் தேர்வாக "சைவம்" என்று போட்டிருந்தார்கள். என்னடா இது மதுரக்காரனுக்கு வந்த சோதனை என்று நாங்கள் கொந்தளித்து விட்டோம்!  நீங்கள்தான் இந்தியராயிற்றே,  அசைவம் சாப்பிடுவீர்களா என்று ஒரு தடவைக்கு மூன்று தடவை கேட்டு  உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பிறகு மதிய உணவின் போது மேசையில் முதலில் வந்த  வாத்துக்கறியைப் பார்த்த பிறகுதான் நிம்மதி பிறந்தது!                 check in - கடமைகளை முடித்த பின் ஐந்து நிமிடம்  சிறிய படகில் பயணித்து நம்முடைய கப்பலைச் சென்று சேர்ந்தோம். நாங்கள் முதலில் பதிவு செய்திருந்தது சற்றே விலை குறைவான ஒரு cruise package தான். ஆனால் இரண்டு நாட்கள் முன்

வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

Image
            ஒரு வெளி நாட்டு பயணம் போகலாம் ஆனால் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று தயங்குகிறீர்களா, அப்படியானால் நீங்கள் வியட்நாம் போகலாம், அங்கு தமிழிலேயே பேசலாம். ஏனென்றால் ஆங்கிலமோ, தமிழோ நீங்கள் எது பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. பெரும்பாலான உரையாடல்கள் சைகை மொழியிலும்,google Translator செயலியின் உதவியுடன்தான்.              இந்த முறை வியட்நாம் போகலாம் என்று முடிவு செய்ததற்கு எந்த சிறப்பு காரணங்களும் இல்லை,  கொஞ்சம் குறைத்த பட்ஜெட்டில் அழகான இடங்கள் பார்க்கலாம் என்பது தவிர. சென்ற இரண்டு முறையும் இமய மலையைத் தொட்டுவிட்டு வந்ததால் இம்முறை மருதமும், நெய்தலும்! இந்த பயணமும் நாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டதுதான். பயண முகவர்களிடம் செல்லவில்லை.                வியட்னாம் நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு.  உலக வரைபடத்தில் சென்னையில் இருந்து நேர் கிழக்காக ஒரு கோடு கிழித்தால் தெற்கு வியட்நாமின்  ஹோ சி மின் சிட்டி (Ho Chi Min City) என்றால்,கல்கத்தாவில் இருந்து அதே போல ஒரு கோடு போட்டால் வடக்கு வியட்நாமில் ஹனோய் (Ha Noi).                 எங்கள் பயணத்  திட்டத்தில் வடக்கு வியட்நாமும், மத்தியில் Da Nang

உடுப்பி பயணம்-2

Image
  பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் அதிகாலை நடையை நான் தவற விடுவதில்லை. எப்படிப்பட்ட சாதாரண ஊரானாலும் அதிகாலையில் அது அழகாகத்தான் தோன்றும் என்பது என் கருத்து.  சுற்றுலா என்று வந்து விட்டு  இரவெல்லாம் குடித்துவிட்டு அதிகாலையில் உறங்குபவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் மிக மிகப்  புத்துணர்வான அதிகாலை அனுபவத்தை இழக்கிறார்கள். நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உணவு செய்து கொடுக்கும் வசதியெல்லாம் இல்லை. அதிகாலை நடையுடன் தெருவோர டீக்கடையில்  ஒரு காப்பியும் குடிக்கலாம் என்று நினைத்து நடந்தேன். உடுப்பியில் நான் அப்படி ஒரு டீக்கடையைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மிக அரிதாகத்தான் இருக்கும். உடுப்பி ஊரின் நிலஅமைப்பு கேரளா போலத்தான். அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகள் எல்லாமே தேக்கு,பலா,மா உள்ளிட்ட மரக்கூட்டங்களுக்கு உள்ளே இருக்கின்றன. ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீடுகள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன்.ம்ஹூம் அப்படி எதுவும் தென்படவில்லை. காலை 8 மணிக்கெல்லாம் கார் வந்து விட்டது.  இன்று உடுப்பி உள்ளூர் கடற்கரைகள்தான் செல்லவேண்டும். உடுப்பியில் உ