பயணங்கள் தொடர்கின்றன - 3 : தஞ்சை

இரண்டு நாட்கள் தஞ்சை மாவட்ட பயணம் . ஆ.. ஊ என்று தஞ்சை பெரியகோவிலைப் பற்றி பீலா விடும் யுடியூப் வீடியோக்கள் என்னை எப்போதும் ஈர்த்ததில்லை. சமஸ் எழுதிய 'சாப்பாட்டு புராணம்' புத்தகம்தான் எனக்கு இந்த பயண ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒரு Culinary Tour போவதற்காகவே பலமுறை திட்டமிட்டும் கூட போக முடியாமல் தடை பட்டிருந்த இடம் இது. ஆதலால் இந்த முறையும், நம்பிக்கை இல்லாமல்தான் பயணச்சீட்டை ரயிலில் முன் பதிவு செய்திருந்தேன். பொதுவாக நாங்கள் எங்கள் பயணத் திட்டங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தையும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவோம். ஆனால் இந்த முறை 2 நாட்கள் முன்பு வரை ஹோட்டல் முன் பதிவு செய்யவில்லை. , போகும் இடம், நேரம் எதுவென்று எல்லாம் முடிவு செய்யவே இல்லை. எல்லாமே கடைசி நேர முடிவுகள்தான். ஆனாலும் இந்தப் பயணம் மனம் நிறைவாக இருந்தது. ஒரு முக்கியமான விஷயம், தஞ்சை மாவட்ட கோவில்களைப் பார்க்க வேண்டும் என்றால், தங்குவதற்கு சரியான இடம் கும்பகோணம்தான். பல கோவில்கள் 30-40 கிமீ சுற்றளவுக்குள் வந்துவிடும். நாங்கள் உழவன் எக்...