வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

ஒரு வெளி நாட்டு பயணம் போகலாம் ஆனால் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று தயங்குகிறீர்களா, அப்படியானால் நீங்கள் வியட்நாம் போகலாம், அங்கு தமிழிலேயே பேசலாம். ஏனென்றால் ஆங்கிலமோ, தமிழோ நீங்கள் எது பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. பெரும்பாலான உரையாடல்கள் சைகை மொழியிலும்,google Translator செயலியின் உதவியுடன்தான். இந்த முறை வியட்நாம் போகலாம் என்று முடிவு செய்ததற்கு எந்த சிறப்பு காரணங்களும் இல்லை, கொஞ்சம் குறைத்த பட்ஜெட்டில் அழகான இடங்கள் பார்க்கலாம் என்பது தவிர. சென்ற இரண்டு முறையும் இமய மலையைத் தொட்டுவிட்டு வந்ததால் இம்முறை மருதமும், நெய்தலும்! இந்த பயணமும் நாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டதுதான். பயண முகவர்களிடம் செல்லவில்லை. வியட்னாம் நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு. உலக வரைபடத்தில் சென்னையில் இருந்து நேர் கிழக்காக ஒரு கோடு கிழித்தால் தெற்கு வியட்நாமின் ஹோ சி மின் சிட்டி (Ho Chi Min City) என்றால்,கல்கத்தாவில் இருந்து அதே போ...