பயணங்கள் தொடர்கின்றன -2 : மன்றோ தீவு

நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எங்களை பள்ளியிலிருந்து வெளியில் அழைத்துச் சென்றார்கள்.எதற்கு தெரியுமா? வைகை ஆற்றில் வெள்ளம் வருவதை பார்ப்பதற்காக! பல ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இருகரையும் தொட்டு வெள்ளம் செல்லும் எங்கள் ஊரின் ஆறு அது! இந்த மாதம் கூட 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் வைகையின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது. வைகையையே பார்த்து வளர்ந்ததால்தானோ என்னவோ தண்ணீர் தேசங்கள் என்னை பிரமிக்க வைக்கிறது! அரிப்பாவில் இருந்து கிளம்பி நாங்கள் குளத்துப்புழா வழியாக மன்றோ தீவு சென்றடைந்தோம். மன்றோ தீவு முதலில் எங்கள் பயணத்திட்டத்தில் இல்லை. நாங்கள் கொல்லத்தைச் சுற்றியுள்ள இடங்களைத் தேடும்போது, எங்களுக்குச் சிக்கியது. எவ்வளவு அழகான இடம் இது! அதிகம் சந்தைப்படுத்தப் படாமல் உள்ளது! கொல்லத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மன்றோ தீவு உள்நாட்டில் அமைந்த ஒரு தீவாகும் (Inland island ).கல்லடா ஆற்றுக்கும் அஷ்டமுடி ஏரி க்கும் நடுவில் அது அமைந்துள்ளது. 10,000 மக்கள் வசிக்கிறார்கள்.இது ஒரு தீவு என்று மற்றவர்கள் சொன்னால் தான் நம...