காஷ்மீர்ப் பயணம்- 5 : பஹல்கம் (Pahalgam) - ஸ்ரீநகர் - குல்மார்க் (Gulmarg)

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க் காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர் காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam) மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே யாசிர் வந்துவிட்டார். காலை உணவாக ஆலு பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, Oswal Cottage -இல் இருந்து கிளம்பினோம். இந்த இரண்டு நாட்களில் லிதர் ஆற்றில் தண்ணீர்ப் பெருக்கு அதிகரித்திருந்தது. மேலும் கீழே செல்லச் செல்ல பல கிளை ஆறுகளும், அருவிகளும் சேர்ந்து தண்ணீர் பெருகி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் Yenner என்ற இடத்தில் நிறுத்தி சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். இன்று ஸ்ரீநகர் சென்று சில இடங்கள் பார்ப்பதாகத் திட்டம். ஆனால் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை பெய்தால் மொஹல் தோட்டங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு. நான் ஹஸ்ரத்பால் தர்ஹாவுக்கு செல்லலாம் என்று சொன்னேன். அது 1990-களில் செய்தித்தாள்களில் அடிக...