Posts

Showing posts from August, 2020

ஏப்பே, இந்த ஊருக்கு எந்த பஸ்ஸுப்பே போகும்?

Image
  2015 இல் பின்லாந்து விசாவுக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது..விசா நேர்காணல் திங்கட்கிழமை காலை என்பதால் நான் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் எடுத்து டெல்லி போய்விட்டேன். அங்கிருந்து பிவாடி -யில் இருக்கும் என் கல்லூரி நண்பனைப் பார்க்கப் போகலாம் என்று ஒரு எண்ணம். பிவாடி டெல்லியில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. அளவில் நம் ஊர் கோவில்பட்டியை விட சற்றே பெரியஊரான இது ராஜஸ்தானின் ஒரு முக்கியத் தொழில்மையமாகும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கி பிவாடி போக வேண்டும் என்றால், ஒரே வழி டாக்ஸிதான் என்று சொல்கிறார்கள். டாக்ஸி கட்டணம்  3000 ரூபாய் கேட்கிறார்கள். பொதுப்போக்குவரது பற்றி விசாரித்தால் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள்!  இது 2015 இன் நிலை  என்றால், 2020 இல் மட்டும் பெரிதாக முன்னேறிவிடவில்லை.  நிலை என்னவென்று கீழ்க்கண்ட படத்தைப்பார்க்கலாம் அதாவது, புது டெல்லி சென்று, அங்கிருந்து ஹூடா சிட்டி சென்டர் - மெட்ரோலில் பயணித்து, அங்கிருந்து 45 கி.மீ தூரம் நாம் டாக்ஸியில் செல்லவேண்டும். கிட்டத்தட்ட ரூபாய் 1200/- ஒரு ஆளுக்கு.  இந்தியாவின் தலை நகரில் இருந்து அண்டை மாநிலத்தி...