இசை எங்கிருந்து வருகிறது!
சிங்கப்பூரில் ஒருமுறை எங்கள் client ஒரு சீன சிங்கப்பூரரிடம் நாங்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 2004 இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருந்தன.பேச்சு இந்தியாவில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பது பற்றி வந்தது. பொதுவாக மற்ற நாட்டவர்களிடம் தம் நாட்டின் நடைமுறை நிர்வாகச் சிக்கல்களைக் கிண்டலடித்துப் பேசுவது என்றால் இந்தியர்களுக்குக் கொண்டாட்டந்தான். இந்தியத் தேர்தல்களில் அடையாள அட்டை இப்போதுதான் வந்தது என்றும், யார் வேண்டுமானாலும் கள்ள வோட்டுப் போடலாம் என்றும் நண்பர்கள் அளந்து விட்டுக்கொண்டிருந்தனர். அந்த இள வயது சிங்கப்பூரருக்கு அடையாள அட்டை இல்லாமல் தேர்தல் நடப்பதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை. "அது எப்படி ஒரு ஆளை அடையாள அட்டை இல்லாமல் அங்கீகரிப்பது?" நான் கேட்டேன்... "1948 இல் இருந்து உங்கள் ஊரில் தேர்தல் நடக்கிறது, சுதந்திர சிங்கப்பூரில் 1965 இல் இருந்து தேர்தல் நடக்கிறதே, எப்போது அடையாள அட்டை வந்தது ? " " " "அடையாள அட்டை வருவதற்கு முன் உங்கள் ஊரில் தேர்தல் எப்படி ந...